அடல் பிகாரி வாச்பாய் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அடல் பிகாரி வாச்பாய் விசுவவித்யாலயா (Atal Bihari Vajpayee University)[1][2] (முன்னர் பிலாஸ்பூர் விஸ்வவித்யாலயா) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் அமைந்துள்ள மாநில அரசு பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் 2012ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 164 இணைவுப் பெற்ற கல்லூரிகளும் 5 துறைகளும் செயல்படுகிறது.[3]
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் சத்தீசுகர் விஸ்வவித்யாலயா (திருத்தம்) சட்டம், 2011 சட்டம் (2012 ஆம் ஆண்டின் எண் 7) மூலம் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சத்தீஸ்கர், பிலாஸ்பூரில் உள்ள பழைய உயர் நீதிமன்றத்தில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
Remove ads
துறைகள்
அடல் பிஹாரி வாஜ்பாய் பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுநிலை மற்றும் பல்வேறு பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளைப் பல பிரிவுகளில் வழங்குகிறது.
- வணிகவியல் இளங்கலை
- வணிகவியல் (முதுநிலை)
- உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பம் (இளநிலை)
- உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பம் (முதுநிலை)
- கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டில் இளங்கலை அறிவியல் (ஹான்ஸ்.)
- கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் (முதுநிலை)
- உணவக மேலாண்மை-இளங்கலை (BHM)
- நுண்ணுயிரியல் மற்றும் உயிர் தகவல்தொடர்பு (முதுநிலை)[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads