அட்டாங்க யோகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சைவத்திருமுறைகளில் பத்தாம் திருமுறையான திருமூலர் எழுதிய திருமந்திரம் ஒன்பது ஆகமங்களின் கருத்தை ஒன்பது தந்திரங்களில் விளக்குகின்றது. இதில் மூன்றாம் தந்திரம் வீராகமத்தின் சாரமாகும். மூன்றாம் தந்திரத்தில் முதலாவதாக இடம் பெற்றிருப்பது அட்டாங்க யோகம் எனப்படும்.

அது அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்களைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறுகிறது[1]:

இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே (திருமந்திரம் : 3:1:4)

Remove ads

பெயர்க் காரணம்

அட்டம் என்பது எட்டு என்ற எண்ணைக் குறிக்கும். அங்கம் என்பதற்கு உறுப்பு எனப் பொருள். யோகம் என்பது கூடுகை, பொருந்துகை என்று பொருள்படும்; அதன்பொருளை வளர்த்து இறைவனுடன் அருளால் ஒன்றுதலைக் குறிக்கும் என்று கூறுவர். உயிர்கள் இறைவனுடன் ஒன்றுபடக் கடைப்பிடிக்க வேண்டிய எட்டுப் படிநிலைகளை எடுத்துரைப்பதே அட்டாங்க யோகம் எனப்படுகிறது. [2]

எட்டு உறுப்புகள்

முத்தி பெறுவதற்குரிய வழிகள் நான்கு என்பது சைவநெறி. அவற்றுள் யோகம் என்பது ஒன்று. யாகம் என்பது தவம். திருமந்திரம் எட்டு வகையான யோக நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றை அட்டாங்க யோகம் என்கிறது. [3]

  1. இயமம்: பதஞ்சலி யோகசூத்திரம் ஐந்து இயமங்களை நவில்கின்றது: கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை  புலன் அடக்கம் என்பனவாம்.
    ஆனால் திருமந்திரமோ பத்தினை நவில்கின்றது: கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, நல்ல குணங்கள், புலன் அடக்கம், நடுநிலைமை (விருப்பு வெறுப்புக்கள் இன்மை), பகுத்துண்டல், மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான் ஆகும். கொல்லான்,பொய் கூறான், களவிலான், எண்குணன், நல்லான், அடக்க முடையான், நடுச்செய்ய வல்லான், பகுத்துண்பான், மாசிலான், கட்காமம் இல்லான் இயமத் திடையில்நின் றானே [எண்குணன் = எண்ணும் குணமுடையான், எதையும் ஆராய்ந்து அறியும் குணம்]
  2. நியமம் - தவம், மனத்தூய்மை, வாய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல். [4]
  3. ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல். [5] [6]
  4. பிராணாயாமம் - உயிர்க்கும் உயிர் மூச்சைக் கட்டுக்குள் கொண்டுவருதல். [7] [8] இதுவும் இரண்டு வகைப்படும். மந்திரமில்லாது நிறுத்தல் [9] ஒருவகை. பிரணவம் காயத்திரி முதலான மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு நிறுத்தல்.
  5. பிராத்தியாகாரம் - மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல். [10]
  6. தாரணை - உந்தி,இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்; [11] [12]
  7. தியானம் - கண்களைத் திறந்தும் திறவாமலும் வைத்துக்கொண்டு சிவனை உள்நோக்குதல் [13] [14]
  8. சமாதி - விந்துநாதம் காணல் [15] [16]


இத்தகு அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.

Remove ads

இவற்றையும் காண்க

உசாத்துணை நூல்கள்

  • துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads