அண்ணா நகர் ஐயப்பன் கோயில்
சென்னையிலுள்ள ஓர் ஐயப்பன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அண்ணாநகர் ஐயப்பன் கோயில்[1] இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது. சென்னையில் பக்தர்கள் அதிக அளவில் தரிசிக்க வரும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆண்டின் எல்லா தினங்களிலும் முறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன. கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் பெருமளவில் விரத மாலை அணிதலையும், இருமுடி கட்டுதலையும் இங்கு செய்கிறார்கள்.
Remove ads
கோயில் வரலாறு
1979 ஆம் ஆண்டு சிறிய அளவில் இக்கோயில் கட்டப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ ஐயப்ப சேவா சமாஜம், அண்ணா நகர் இக்கோயிலை அப்போது நிறுவி இன்றும் நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பின் 5 ஆண்டுகால முயற்சிகளால், ஒரு முழுமையான கோயில் கேரள மாநிலத்திற்குரிய கட்டிடக்கலை நுணுக்கத்துடன் 1984 ஆம் ஆண்டு மே மாதம் கட்டிடக்கலை நிபுணர் கணிபய்யூர் கிருஷ்ணன் நம்பூதிரியால் கட்டி முடிக்கப்பட்டது.
கோயிலின் அமைப்பு
கோயிலின் கருவறை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஐயப்பன் வீற்றிருக்கும் கருவறைக்கு இடதுபுறம் கடவுளர்கள் கணபதி மற்றும் சுப்பிரமணியர் சிலைகளும், வலதுபுறம் கடவுள் துர்கா சிலையும் உள்பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று கடவுளரும் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள். நவக்கிரகங்கள் வீற்றிருக்கும் மேடை, கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது. கடவுள் ஆஞ்சநேயரின் சிலை, கோயிலின் தென்மேற்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads