அனைத்திந்திய சாதுக்கள் கூட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனைத்திந்திய சாதுக்கள் கூட்டமைப்பு அல்லது அகில பாரத அக்காரா பரிசத் (Akhil Bharatiya Akhara Parishad|ABAP) இந்தியாவில் வாழும் இந்து சமய சாதுக்களின் உயர்நிலை கூட்டமைப்பாகும்.[1][2] இக்கூட்டமைப்பில் 14 சாது சங்கங்கள் இணைந்துள்ளது. அவற்றுள் ராம ஜென்ம பூமி தொடர்பான நிர்மோகி அக்காராவும் மற்றும் ஸ்ரீதத்தாத்திரேயர் அக்காரவும் முக்கிய சாதுக்களின் சங்கங்கள் ஆகும்.
அமைப்பு
அக்காரா எனும் இந்தி மொழிச் சொல்லிற்கு மல்யுத்த வளையம் அல்லது வாதப் போரிடும் இடம் எனப் பொருள்படும்.[3]இச்சாதுக்களின் கூட்டமைபான அக்காராவில், பெரும்பான்மையாக சைவ சமயம் மற்றும் வைணவ சமயம் தொடர்பான சாதுக்களின் குழுக்களை கொண்டுள்ளது.
வரலாறு
மகாநிர்வாணி, நிரஞ்சனி, ஜுனா, அடல், அவஹான், அக்னி மற்றும் ஆனந்த அக்காரா ஆகிய தசநாமி சாதுக்கள், ஆதிசங்கரர் காலத்தில் உருவானதாக கருதப்படுகிறது. கும்ப மேளாக்களின் போது அக்காரா கூட்டமைப்பின் பங்களிப்பு அளப்பரியதாகும்.[3] இந்து சமய மக்களை பிறரிடமிருந்து காப்பதற்கு, கி பி 1565-இல் மதுசூதன சரஸ்வதி என்பவர் ஆயுதம் தாங்கிய சாதுக்களின் அமைப்பை உருவாக்கினார். [3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads