அபாத்து நியூக்ளியசு பேரங்காடி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia

அபாத்து நியூக்ளியசு பேரங்காடிmap
Remove ads

அபாத்து நியூக்ளியசு பேரங்காடி (Abad Nucleus Mall) கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகமாகும். வளரும் புறநகர்ப் பகுதியான மரதுவில், திருப்புனித்துராவிற்கு அருகில் நகர மையத்திற்கு அருகில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொச்சியிலுள்ள பிரபலமான அபாத்து [1] கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டு பேரங்காடி நிர்வகிக்கப்படுகிறது. 1.25 இலட்சம் மொத்த குத்தகை (சில்லறை) வருவாய் தரும் இடம் உட்பட மொத்தம் 2.3 லட்சம் சதுர அடியில் பேரங்காடி கட்டப்பட்டுள்ளது.[1][3] 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று 3 தளங்களில் பேரங்காடி திறக்கப்பட்டது.[2] இந்தியாவின் முதல் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் தலைமை அமைப்பு சான்றளிக்கப்பட்ட தங்கம் தரமதிப்பீடு செய்யப்பட்ட பேரங்காடி அபாத்து நியூக்ளியசு பேரங்காடியாகும்.[4] 2012 ஆம் ஆண்டிற்கான தென்னிந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வணிகத் திட்டப் பிரிவிலும் இப்பேரங்காடி விருது பெற்றது.

விரைவான உண்மைகள் இருப்பிடம்:, அமைவிடம் ...
Remove ads

பொழுதுபோக்கு அம்சங்கள்

  • நவீன முறையில் இயக்கப்படும் 168 மற்றும் 132 இருக்கைகள் கொண்ட 2 திரை பல்காட்சி திரைகள்
  • 7500 சதுர அடியில் விளையாட்டிட மண்டலம்.
  • 24 இருக்கைகள் கொண்ட 6 பரிமாண திரையரங்கம். இந்தியாவில் இத்தகைய முதல் திரையரங்கு ஆகும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads