அபிசேக் சர்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபிசேக் சர்மா (பிறப்பு 4 செப்டம்பர் 2000) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் . [1] அவர் 25 பிப்ரவரி 2017 அன்று 2016-17 விஜய் ஹசாரே கோப்பைத்தொடரில் பஞ்சாப் அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் [2] அவர் 6 அக்டோபர் 2017 அன்று 2017-18 ரஞ்சிக் கோப்பைத் தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் [3]
டிசம்பர் 2017 இல், நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 2018 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றார். [4]
Remove ads
உள்ளூர்ப் போட்டிகள்
ஜனவரி 2018 இல், அவர் 2018 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸால் ரூ 5.5 மில்லியனுக்கு வாங்கப்பட்டார். [5] [6] [7] 12 மே 2018 அன்று, அவர் தனது இருபது20 அறிமுகப் போட்டியில் 2018 இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி 19 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்தார். [8] 28 பிப்ரவரி 2021 அன்று மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக பஞ்சாப் அணிக்காக விளையாடி, பட்டியல் அ துடுப்பாட்டத்தில் 42 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் இந்திய வீரர்களில் பட்டியல் அ போட்டிகளில் அதிவேக சதம் பெற்ற வீரர் ஆனார். [9] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். [10] [11] 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில், அவர் 14 போட்டிகளில் விளையாடி மொத்தம் 426 ஓட்டங்கள் எடுத்தார் [12]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads