அமர்நாத் விரைவுவண்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவிலுள்ள குவஹாத்திக்கும் ஜம்மு தாவிக்கும் இடையே அமர்நாத்[1] அதிவிரைவு ரயில் செயல்படுகிறது. இது அசாம், மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம், உத்ரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய எட்டு மாநிலங்களை இணைப்பதாக இந்த ரயில் சேவை அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் கோவிலினை அடிப்படையாகக் கொண்டு அமர்நாத் அதிவிரைவு ரயில் என்று பெயர் சூட்டப்பட்டது.
வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்
Remove ads
வண்டி எண் 15098[3]
இது சஹாரன்புர் சந்திப்பில் இருந்து பரௌனி சந்திப்பு வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 52 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 1185 கிலோ மீட்டர் தொலைவினை 22 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 195 ரயில் நிறுத்தங்களில், 17 நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக 17 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக ஒரு மணிநேரம் மற்றும் 13 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.
Remove ads
வண்டி எண் 15097[4]
இது பரௌனி சந்திப்பில் இருந்து ஜம்மு டவி வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 52 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 1643 கிலோ மீட்டர் தொலைவினை 31 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 271 ரயில் நிறுத்தங்களில், 24 நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக 4 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக ஒரு மணிநேரம் மற்றும் 23 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads