அரசு புறநகர் மருத்துவமனை, பெரியார் நகர்
சென்னையிலுள்ள ஓர் அரசு மருத்துவமனை From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரசு புறநகர் மருத்துவமனை, பெரியார் நகர், இந்தியா தீபகற்பத்தின், தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை மாவட்டத்தில், பெரம்பூர் நகரின் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ளது. 1986-ஆம் ஆண்டு தமிழகத்தின் அன்றைய முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. ஆர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு, இன்றைய நிலையில், 300 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்டதாக உள்ளது. 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தினமும் சுமார் 1300 வெளிநோயாளிகள் மற்றும் 85 உள்நோயாளிகள், இம்மருத்துவமனையால் பயன் பெற்றனர். 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி முதல் இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.[2]
Remove ads
அமைவிடம்
சென்னையின் பெரம்பூர் நகரின் பெரியார் நகர் பகுதியில், கார்த்திகேயன் சாலையில், தரம் உயர்த்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனை காட்சியளிக்கிறது. இதன் புவியியல் ஆள்கூறுகள் 13°06'55.6"N 80°13'24.4"E ஆகும்.
பயன்பெறும் ஊர்கள்
இம்மருத்துவமனை மூலம் கொளத்தூர், பெரியார் நகர், அகரம், ஜவஹர் நகர், செம்பியம், பெரவள்ளூர், திரு. வி. க. நகர், பெரம்பூர், ஜி. கே. எம். காலனி, பொன்னியம்மன்மேடு, பூம்புகார் நகர் மற்றும் வில்லிவாக்கம் ஊரிலுள்ள மக்கள் மிகவும் பயனடைகின்றனர்.
தரம் உயர்வு
இம்மருத்துவமனை, தொற்று நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக, தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில், 4 அறுவை சிகிச்சை அரங்கங்கள் 2.75 கோடி ரூபாய் செலவிலும், ஆக்சிஜன் உற்பத்திக் கலன் 1.28 கோடி ரூபாய் செலவிலும், ஆய்வகம் ஒன்று 1 கோடி ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ளன.[3] நவீன நுண்கதிர் வீச்சகம், குளிர்சாதன அறுவை சிகிச்சை அரங்குகள், சி. டி. ஸ்கேன் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், உயர் ரக கருவிகள் கொண்ட நவீன ஆய்வகங்கள், சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, வென்டிலேட்டர் வசதிகள், உயர் ரக மருத்துவ உபகரணங்கள், முழு அளவிலான விபத்து மற்றும் அவசர காலப் பிரிவு, ஜெனரேட்டர் வசதிகள், உயரழுத்த டிரான்ஸ்பார்மர் வசதி, நோயாளிகளின் உடனிருப்போர் அறிந்து கொள்ள நவீன டிஜிட்டல் பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள், இரத்த சேமிப்பு வசதிகளுடன் கூடிய சிறப்பு மகப்பேறு பிரிவு, நவீன தொற்று நோய்களை எதிர்கொள்ளும் வகையில் அதிகமான படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டுகள், குளிர்சாதன வசதிகள் கொண்ட சிறப்பு வார்டுகள் என மிகவும் தரம் உயர்த்தப்பட்டு நோயாளிகள் பலனடையும் வண்ணம் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
