அலுமினியம் சிலிக்கேட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அலுமினியம் சிலிக்கேட்டு அல்லது அலுமினம் சிலிக்கேட்டு (Aluminium silicate or aluminum silicate) என்பது அலுமினியம் ஆக்சைடு, Al2O3 மற்றும் சிலிக்கன் ஈராக்சைடுSiO2 ஆகிய சேர்மங்களில் இருந்து தருவிக்கப்படும் வேதிச் சேர்மங்களாகும். இவை இயற்கையாகவே தோன்றுவனவாகவும் அல்லது செயற்கை முறையில் தயாரிக்கக்கூடிய நீரிலிகள் அல்லது நீரேற்றுகளாகவும் இருக்கலாம். அலுமினியம் சிலிக்கேட்டுகளின் பொது வாய்ப்பாடு பெரும்பாலும் xAl2O3.ySiO2.zH2O என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் அலுமினியம் சிலிக்கேட்டு என்ற பகுப்பு கீழ்கண்ட சேர்மங்களையும் உள்ளடக்கியது ஆகும்.

  • Al2SiO5, (Al2O3.SiO2), இயற்கையில் கனிமங்களாகத் தோன்றுபவை, அண்டலுசைட்டு, கயனைட்டு மற்றும் சில்லிமனைட்டு முதலியன. இவை வெவ்வேறு படிக வடிவங்களில் காணப்படுகின்றன.
  • Al2Si2O5(OH)4, (Al2O3·2SiO2·2H2O), இயற்கையில் கயோலினைட்டு கனிமங்களாகத் தோன்றுபவை, இவை அலுமினியம் சிலிக்கேட்டு இருநீரேற்றுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.[1] நுண்ணியத் துகளாகக் காணப்படும் இத்தூள் காகிதம், இரப்பர் ஆகியனவற்றில் நிரப்பியாகவும் மற்றும் சாயத் தொழிலிலும் பயன்படுத்தப்படுகிறது.[1]
  • Al2Si2O7, (Al2O3.2SiO2), மெட்டா கயோலினைட்டு என்று அழைக்கப்படும் இவை கயோலினை 450 0 செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் உண்டாகின்றன. தொகுப்பிலுள்ள
  • Al6SiO13, (3Al2O3.2SiO2), முல்லைட்டு கனிமம், வெப்பவியக்கவிசையின்படி வளிமண்டல அழுத்தத்தில் நிலைப்புத்தன்மை கொண்ட Al2O3-SiO2. தொகுப்பிலுள்ள ஒரே இடைமுகக்கனிமம் ஆகும். இது '3:2 முல்லைட்டு என்ற பெயராலும் அழைக்கப்பட்டு 2Al2O3.SiO2, Al4SiO8 '2:1 முல்லைட்டு' என்ற கனிமத்தில் இருந்து வேறுபடுத்தப்படுகிறது.[1]
  • Al6SiO13, (3Al2O3.2SiO2), முல்லைட்டு கனிமம், வெப்பவியக்கவிசையின்படி வளிமண்டல அழுத்தத்தில் [2] நிலைப்புத்தன்மை கொண்ட Al2O3-SiO2 தொகுப்பிலுள்ள ஒரே இடைமுகக்கனிமம் ஆகும். இது '3:2 முல்லைட்டு என்ற பெயராலும் அழைக்கப்பட்டு 2Al2O3.SiO2, Al4SiO8 '2:1 முல்லைட்டு' என்ற கனிமத்தில் இருந்து வேறுபடுத்தப்படுகிறது.
  • 2Al2O3.SiO2, Al4SiO8 '2:1 முல்லைட்டு
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
Remove ads

அலுமினியம் சிலிக்கேட்டு கலவைப் பொருட்கள், இழைநார்

அலுமினியம் ஆக்சைடு மற்றும் சிலிக்கன் ஈராக்சைடு ஆகிய சேர்மங்களால் ஆக்கப்பட்ட ஒருவகையான இழைநார் சேர்மம் அலுமினியம் சிலிக்கேட்டு ஆகும். எனவே இவை அலுமினியம் சிலிக்கேட்டு இழைநார்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. வேதிச்சேர்மங்கள் என்பதைத் தாண்டி இவைகள் பளபளப்பான கண்ணாடிக் கரைசல்களாக உள்ளன. இவற்றின் பகுதிப்பொருட்கள் அலுமினா, Al2O3 மற்றும் சிலிக்கா, SiO2 ஆகியனவற்றின் எடைகளின் அடிப்படையில் விவரிக்கப்படுகின்றன. அலுமினாவின் எடை சதவீதத்தை அதிகரிப்பதால் ஒரு பொருளின் வெப்பத் தடையை அதிகரிக்கமுடியும். கம்பளிகள், போர்வைகள், உரோம அட்டைகள், காகிதங்கள் அல்லது அட்டைகள் முதலியனவற்றிலும் இந்த இழைநார் பொருட்கள் இடம்பெறுகின்றன.[3]

Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads