அலைக்கம்பம்

From Wikipedia, the free encyclopedia

அலைக்கம்பம்
Remove ads

அலைவழிப்படுத்தி அல்லது அலைக்கம்பம் மின் கம்பத்தில் பயணிக்கும் மின்காந்த அலையை வெறுவெளியில் இடுவதற்கும், வெறுவெளியில் உள்ள மின்காந்த அலையை உள்வாங்கி மின் கம்பத்தின் ஊடாக சாதனங்களுக்கு வழங்குவதற்கும் பயன்படும் ஒரு மின் கருவி. அதாவது மின்கம்பத்தின் துணையுடன் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் இடையே நிகழும் உருமாற்றத்துக்கு அலைக்கம்பம் உதவுகின்றது. அலைக்கம்பம் தொலைதொடர்பு சாதனங்கள் (சமிக்கை செலுத்திகள், சமிக்கை பெறுவிகள்), ராடர், வழிகாட்டிகள், வானலை வானியல் சாதனங்கள் போன்ற பல உபகரணங்களில் பயன்படுகின்றது.[1][2][3]

Thumb
எ.எம் வானொலி வானலை செலுத்தி

மின் கம்பத்தின் துணையுடன், அல்லது அலைவழிபடுத்தி ஊடாக பயணிக்கும் மின்காந்த அலைகள் வெறுவெளிக்கு வீசப்படுவதற்கு சில காரணிகள் ஏதுவாக வேண்டும். அதாவது எல்லாவித மின்காந்த அலைகளும் மின் கம்பத்தின் வழிப்படிதலில் இருந்தோ அல்லது அலைவழிப்படுத்தியிலிருந்தோ வெறுவெளிக்கு தாவுவதில்லை. மின்காந்த அலைகள் மின் கம்பத்தில் இருந்து அலைக்கம்பம் ஊடாக ஏன், எப்படி, எவ்வாறு வெறுவெளிக்கு வீசப்படுகின்றன, மற்றும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைகளை அலைக்கம்பம் எவ்வாறு உள்வாங்குகின்றது என்பதை மக்ஸ்வெல் சமன்பாடுகளை அடிப்படையாக வைத்து இயற்பியல் கோட்பாடுகள் விளக்குகின்றன.

அடிப்படையில் அலைக்கம்பம் சாதாரண மின் கடத்தியே ஆகும். மின் சுற்று பகுப்பாய்வில் அலைக்கம்பம் ஒரு இருமுனை கருவியாகும். மேலும் இதற்கு ஏற்றெதிர் தன்மையும் உண்டு.

Remove ads

அலைக்கம்ப கூறளவுகள்

கதிர்வீச்சு செலுத்தி அல்லது அலை பெறுவி தேவைகளுக்கு ஏற்ப அலைக்கம்ப வடிவமைப்பு கூறுகள் வேறுபடும். பல கூறளவுகள் உள்ளன, எட்டு கூறளவுகள் கீழே தரப்படுள்ளன. அவற்றுள் கதிர்வீச்சு உருபடிமம், மின் எதிர்ப்பு ஆகியவை முக்கியமானதாகும்.

  • வடிவமைப்பு (உருவ அளவு, கடத்தி தன்மை)
அலைநீளம் பொறுத்து அலைக்கம்ப நீளம், உருவம், கடத்தி தன்மைகள் வேறுபடும்.
  • கதிர்வீச்சு உருபடிமம்
அலைக்கம்பத்தின் மின்காந்த அலை வீச்சு எப்படி பரவும் என்பதை எடுத்துரைக்கும். மின் கதிர்வீச்சே கணிக்கப்படுகின்றது. அதை வைத்து காந்த வீச்சையும், ஆற்றலையும் பின்வரும் சமன்பாடுகள் வைத்து கணித்து கொள்ளலாம். தேவையேற்படின் கட்டம் உருபடிமம், முனைவாக்க உருபடிமமும் அலைக்கம்ப பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுவதுண்டு.
  • மின் எதிர்ப்பு
  • வீச்சு திறன்
  • திசைவு பெருக்கம்
  • கற்றையகலம்
  • கதிரகலம்
  • முனைவாக்கம்
Remove ads

அடிப்படை அலைக்கம்ப வகைகள்

  • எளிய இருமுனை அலைக்கம்பம்
  • அரை அலைநீள இருமுனை அலைக்கம்பம்
  • கால் இருமுனை அலைக்கம்பம்
  • சுருள் அலைக்கம்பம்

நுட்பியல் சொற்கள்

  • அலைக்கம்பம் - Antenna
  • மின்கம்பம் – Wire, Transmission Line
  • மின்தடம் – Transmission Line
  • ராடர் – RADAR
  • வழிகாட்டிகள் – Navigation Systems
  • வானலை வானியல் – Radio Astronomy
  • அலைவழிபடுத்தி – Waveguide
  • மக்ஸ்வெல் சமன்பாடுகள் – Maxwell Equations
  • மின்கடத்தி – Conductor
  • ஏற்றெதிர் – Reciprocal
  • கதிர்வீச்சு உரிபடிமம் – Radiation Pattern
  • மின் எதிர்ப்பு – Impedance
  • வீச்சு திறன் – Radiation Resistance
  • கற்றையகலம் – Bandwidth
  • கதிரகலம் – Beamwidth
  • முனைவாக்கம் – Polorization/polarized

துணை நூல்கள்

  • Edward A. Wolff. (1966). Antenna Analysis. New York: John Wiley & Sons, Inc.
  • Lamont V. Blake. (1966). Antennas. New York: John Wiley and Sons.
  • H. Page. (1966). Principles of Aerial Design. New Jersey: Iliffe books ltd.
  • Matthew N. O. Sadiku. (2001). Elements of Electromagnetics. New York: Oxford Press.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads