அழகப்பன் நகர் மூவர் கோயில்

என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் அழகப்பன் நகர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெ From Wikipedia, the free encyclopedia

Remove ads

மூவர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் அழகப்பன் நகர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2] சொக்கநாதர் சுவாமியை மூலவராகக் கொண்ட இக்கோயிலில், மூலவருக்குப் பின்புறம் விஷ்ணு, மீனாட்சி அம்மன் மற்றும் சிவன் ஆகிய மூவரும் (சிவபெருமானுக்கு மீனாட்சியம்மனை திருமணத்திற்காக விஷ்ணு தாரை வார்த்து) காட்சியளிப்பதால் இக்கோயில் மூவர் கோயில் என்றழைக்கப்படுகிறது. மேலும், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவர் மற்றும் பார்வதி, இலட்சுமி, சரசுவதி ஆகிய முப்பெரும் தேவியர் சன்னதிகளும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளதாலும் இக்கோயில் மூவர் கோயில் என்ற திருநாமத்துடன் திகழ்கிறது.

விரைவான உண்மைகள் அழகப்பன் நகர் மூவர் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 184 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூவர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9.8974°N 78.0952°E / 9.8974; 78.0952 ஆகும்.

சொக்கநாதர், விஷ்ணு, பிரம்மா, வெங்கடாசலபதி, பார்வதி, இலட்சுமி, சரசுவதி, கனகதுர்க்கை, தட்சிணாமூர்த்தி, செல்வ சித்தி விநாயகர், பாலமுருகன், ஐயப்பன், நந்தீசுவரர், சக்கரத்தாழ்வார், அனுமன், கால பைரவர், அப்பர் , சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், வள்ளலார், நாகலிங்கம் மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads