ஆ. வி. மயில்வாகனம்
இலங்கை தமிழ் கல்வியாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வித்யா ஜோதி ஆறுமுகம் விஸ்வலிங்கம் மயில்வாகனம், OBE (13 நவம்பர் 1906 – 25 மார்ச் 1987) என்பவர் ஒரு முன்னணி இலங்கைத் தமிழ் இயற்பியலாளரும், கல்வியாளரும் ஆவார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்
மயில்வாகனம் 1906 நவம்பர் 16 ஆம் நாள் பிறந்தார்.[1][2] இவர் வட இலங்கையில் உள்ள சுதுமலையைச் சேர்ந்த ஆறுமுகம் விசுவலிங்கத்தின் மகன் ஆவார்.[3] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[1][2] இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்த இவர், 1923 இல் இளம் அறிவியலில் முதல் வகுப்பில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[1][3] பின்னர் இவர் 1924 இல் கேம்பிரிட்ஜ் இம்மானுவேல் கல்லூரியில் சேர்ந்தார், 1928 இல் இயற்கை அறிவியல் டிரிபோசில் முதுகலை சிறப்புப் பட்டம் பெற்று,[1][3] 1938 இல் கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2]
மயில்வாகனத்திற்கு கஜானந்தன், நந்தகுமார் என்ற மகன் இருந்தனர்.[3] மயில்வாகனம் பக்திமிக்க இந்து ஆவார்.[4]
Remove ads
பணி
பல்கலைக்கழகத்திற்கு பிறகு மயில்வாகனம் 1932 இல் இயற்பியலில் விரிவுரையாளராக இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் சேர்ந்தார். இவர் 1939 இல் இயற்பியல் பேராசிரியரானார் மற்றும் 1948 மற்றும் 1954 க்கு இடையில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறையின் துறைத்தலைவராக பணியாற்றினார்.[1][2][3] நிக்கோலஸ் ஆட்டிகல துணை வேந்தராக இருந்தபோது பல சந்தர்ப்பங்களில் இவர் துணைவேந்தராக செயல்பட்டார்.[1] இவர் 1966 இல் ஓய்வு பெற்றார்.[3]
1949 ஆம் ஆண்டு பிறந்தநாள் மரியாதையில் மயில்வாகனம் பிரித்தானிய பேரரசின் ஆணை அதிகாரி என்ற கௌரவத்தைப் பெற்றார்.[5] 1985 இல் வித்யா ஜோதி விருதைப் பெற்றார்.[1]
மயில்வாகனம் இலங்கை அறிவியல் முன்னேற்ற சங்கத்தின் தலைவராகவும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அடிப்படைக் கற்கைகள் நிறுவகத்தின் ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் இருந்தார். [1] கொழும்பு பல்கலைக்கழகம் (டிசம்பர் 1980) மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றார். [1][6] கொழும்பு பல்கலைக்கழகம் தனது வருடாந்த விருதுகளில் ஒன்றிற்கு மயில்வாகனத்தின் பெயரை சூட்டியுள்ளது.[7]
Remove ads
இறப்பு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads