ஆஃபினியம்(IV) நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆஃபினியம்(IV) நைட்ரேட்டு (Hafnium(IV) nitrate) என்பது Hf(NO3)4.[2][3][4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆஃபினிமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.
Remove ads
தயாரிப்பு
ஆஃபினியம் டெட்ராகுளோரைடும் டைநைட்ரசன் பெண்டாக்சைடும் சேர்ந்து வினைபுரிவதால் ஆஃபினியம்(IV) நைட்ரேட்டு உருவாகிறது.[5]
பண்புகள்
ஆஃபினியம்(IV) நைட்ரேட்டு சிறிதளவு ஆவியாகும். 0.1 மி.மீட்டர் பாதரச அழுத்தத்தில் 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது பதங்கமாகும்.[6] ≥160°செல்சியசு வெப்பநிலையில் ஆஃபினியம்(IV) நைட்ரேட்டு முதலில் HfO(NO3)2 ஆகவும் பின்னர் HfO2.[6] ஆகவும் சிதைவடைகிறது.
பயன்கள்
ஆஃபினியம் (IV) ஆக்சைடு கொண்ட பொருட்கள் தயாரிக்க ஆஃபினியம் (IV) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads