ஆண்ட்ராய்டு ஐஸ்கிரீம் சாண்ட்விச்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்ட்ராய்டு ஐஸ்கிரீம் சாண்ட்விச் (Android Icecream Sandwich) என்பது கூகிள் வெளியிட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் குறியீடு ஆகும்.அக்டோபர் 19, 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆண்ட்ராய்டு 4.0 திறன்பேசிகள் ,கையடக்க கணினி போன்றவற்றில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.ஏனெனில் இதன் முந்தைய பதிப்பு கையடக்க கணினியில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அண்ட்ராய்டு 4.0 ஒரு புதிய காட்சி தோற்றத்தை "ஹோலோ" என்ற குறியீட்டுடன் அறிமுகப்படுத்தியது.
Remove ads
வளர்ச்சி
ஆகத்து 2011-ல் ரூட்விக்கி எனும் வலைதளத்தில் நெக்சஸ் எஸ் எனும் அலிபேசி ஆண்ட்ராய்டு ஐஸ்கிரீம் சாண்ட்விச் இயங்குதளத்துடன் செயல்படும் என தெரிவித்து இருந்தது.[2][3][4] ஆண்ட்ராய்டு 4.0 பதிப்பை அக்டோபர் 11,20111 அன்று வெளியிடுவதாக இருந்தது.ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மறைவினால் அக்டோபர் 19,2011 ஹாங்காங்-கில் நடைபெற்றது.[5] மேலும்கூகிள் நெக்சஸ் அலைபேசியிலும் இது இருக்கும் என அறிவித்தனர்.[6]
Remove ads
வெளியீடு
ஆண்ட்ராய்டு 4.0 உடன் இணைக்கப்பட்டுள்ள முதல் ஆண்ட்ராய்டு சாதனமாக கேலக்ஸி நெக்ஸஸ் இருந்தது.[6] டி சம்பர் 16, 2011 இல் அண்ட்ராய்டு 4.0.3 வெளியிடப்பட்டது, இது பிழை திருத்தங்கள், புதிய சமூக ஸ்ட்ரீம் ஏபிஐ மற்றும் பிற உள் மேம்பாடுகள் ஆகியவற்றை வழங்கியது.[7].மார்ச் 29, 2012 அன்று, அண்ட்ராய்டு 4.0.4 வெளியிடப்பட்டது, கேமரா மற்றும் திரை சுழற்சி செயல்திறன் மேம்பாடுகள், மற்றும் பிற பிழை திருத்தங்கள் ஆகியவற்றை வழங்கியது.[8]
Remove ads
காட்சி வடிவமைப்பு
வடிவமைப்பு ஐஸ்கிரீம் சாண்ட்விச் இன் புதிய காட்சி தோற்றம் "ஹோலோ" என்று அழைக்கப்படும் விட்ஜெட் கருவி மூலம் செயல்படுத்தப்படுகிறது.பயனர்கள் கட்டமைக்கப்பட்ட இடைமுகத்தோற்றத்தை பின்பற்றினாலும் இதனை காண இயலும்.அதற்கு அவர்கள் கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதனை தரவிறக்கம் செய்ய வேண்டும்.[9][10].
இவற்றையும் காண்க
ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு முந்தைய பதிப்புகள் ஆண்ட்ராய்டு ஒன்று ஆண்ட்ராய்டு எக்லேர்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
