ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம் (Adam's Bridge Marine National Park) என்பது ஆதாமின் பாலம் சுற்றுவட்டாரத்தில் இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள ஒரு தேசிய வனம் ஆகும். இது மன்னார் தென் மேற்கிலிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், மற்றும் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் என்பவற்றின் உதவியோடு அரசாங்கம் வட மாகாணத்தில் ஓர் ஒருங்கிணைந்த தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீட்டைச் செய்து 2014 இல் வெளியிட்டது. அதன்படி 18,990 ha (46,925 ஏக்கர்கள்) பரப்பளவு ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.[1][2] மே 2015 இல் அரசாங்கம் நெடுந்தீவு தேசிய வனம், சுண்டிக்குளம் தேசிய வனம், மடு வீதி தேசிய வனம் என்பவற்றுடன் இதனையும் தேசிய வனமாக இருக்க வேண்டும் என்று அறிவித்தது.[3] ஆதாமின் பாலம்22 சூன் 2015 அன்று 18,990 ha (46,925 ஏக்கர்கள்) பரப்பளவுடன் தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது.[4][5]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads