ஆந்திர மகிளா சபா தகவற்பள்ளி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆந்திர மகிளா சபா தகவற்பள்ளி (Andhra Mahila Sabha School Of Informatics) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ள பெண்களுக்கான தகவல் சார்ந்த மேலாண்மை கல்லூரியாகும்.[1]

விரைவான உண்மைகள் Other nameகள், வகை ...

இந்திய கணிணி கழகம் (Computer Society of India (CSI)) என்பதன் நிறுவன உறுப்பினரான இக்கல்லூரி ஆந்திர மகிளா சபாவின் ஒரு பிரிவாகும். தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி, மேலாண்மை படிப்பில் பட்டம் பெறும் பெண்களுக்கான முதுகலை பாடத்திட்டத்தை பயிற்றுவிக்கிறது. 2003 ஆம் ஆண்டில் DVR விட்டல் மற்றும் இக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர் ஷௌகத் ஏ மிர்சா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இதன் மாணவர் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.[2]

Remove ads

வரலாறு

1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி பத்ம விபூஷன் விருது பெற்றவரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான துர்காபாய் தேஷ்முக்கினால் நிறுவப்பட்ட துர்காபாய் தேஷ்முக் மகிளா சபா எனப்படும் ஆந்திர மகிளா சபா எனப்படும் தன்னார்வ சமூக நல அமைப்பின் மூலம் தொடங்கப்பட்டதாகும்.

வணிக நிர்வாகம் மற்றும் கணினி பயன்பாடுகளில் முதுகலை படிப்புகளில் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவது ஆகியவைகளை இதன் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

Remove ads

அங்கீகாரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads