ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலயம்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலயம் (Andhra Pradesh Capital Region) ஆந்திரப் பிரதேசத் தலைநகரம் அமராவதியையும் அதன் சுற்றுப்புற பகுதிகளையும் உள்ளடக்கிய நகர்த்தொகுதி அல்லது பெருநகர் பகுதி ஆகும். இப்பகுதி முழுமையும் ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலய வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் அமையும். இந்த வலயத்தின் பரப்பளவு 8,352.69 km2 (3,224.99 sq mi) ஆகும்; கிருஷ்ணா மாவட்டத்தில் 29 வட்டங்களும் குண்டூர் மாவட்டத்தில் 29 வட்டங்களுமாக 58 வட்டங்கள் இதில் அடங்கும்.[1] இந்த வலயத்தின் மையத்தில் 212 ச.கி.மீ. பரப்பில் தலைநகரம் அமைந்திருக்கும்.[3]
தலைநகர் வலயத்தில் குண்டூரின் 18 மண்டல்கள் முழுமையாகவும் 11 மண்டல்கள் பகுதியாகவும் அடங்கியுள்ளன; கிருஷ்ணாவில், 15 மண்டல்கள் முழுமையாகவும் 14 மண்டல்கள் பகுதியாகவும் அடங்கியுள்ளன.[4][5]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads