ஆனந்தமாயி மா
இந்து பெண் துறவி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்தமாயி மா (Anandamayi Ma, இயற்பெயர்: நிர்மலா சுந்தரி); 30 ஏப்ரல் 1896 – 27 ஆகத்து 1982) இந்து சமய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர்.[1] ஆனந்தமாயி மாவின் அறிவாற்றல், அற்புதங்கள் மற்றும் நம்பிக்கையால் நோய்களை குணப்படுத்தும் சக்தியால் பக்தர்களால் ஈர்க்கப்பட்டார்.[2] சமற்கிருத மொழியில் ஆனந்தமாயி மா எழுதிய அத்வைத தத்துவ நூலை, பரமஹம்ச யோகானந்தர் "Joy-permeated" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இவருக்கு ஆனந்தமாயி மா எனும் சிறப்புப் பெயர் அவரது சீடர்களால் 1920ல் வழங்கப்பட்டது.[3]
Remove ads
போதனைகள்
ஆனந்தமாயி மா போதனைகளில் முக்கிய கருத்தாக விளங்குவது, ஒவ்வொரு மனிதனுக்கும் மிக உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டியது தன்னை அறிதலே (Self Realisation) ஆகும். கர்ம யோகத்தால் மட்டுமே தனி மனிதனிலும், சமூகத்திலும் தெய்வீக இயல்பை தூண்டி மறுமலர்ச்சி ஏற்படும் என்றார். எனினும் மறுமலர்ச்சிக்காக அனைவருக்கும் அறிவுரை வழங்கவில்லை. ஆன்மீக வாதங்கள் மற்றும் சர்ச்சைகளை அவர் தள்ளுபடி செய்தார். இவர் தனது சீடர்களுக்கு முறையான முன்முயற்சிகளை வழங்கவில்லை, தான் ஒரு குரு என அழைக்கப்படுவதற்கு மறுத்துவிட்டார், ஏனெனில் "அனைத்துப் பாதைகளும் என் பாதைகள்" என்றும், "எனக்கு எந்த தனி வழியும் இல்லை" என்றும் அமிர்தானந்த மாயி மா கூறினார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads