ஆர்மீனியத் தேவாலயம், சென்னை
சென்னையில் உள்ள ஒரு தேவாலயம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புனித மேரி தேவாலயம் (Armenian Church, Chennai, ஆர்மீனியம்: Սուրբ Աստվածածին Եկեղեցի ) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு தேவாலயம் ஆகும். இது 1712 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1772 ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டது. இது இந்திய துணைக்கண்டத்தின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இதன் ஆறு மணிக்கூண்டு கோபுரம் பிரபலமானது. ஆர்மீனிய கன்னி மேரி தேவாலயம் என்றும் அழைக்கப்படும் இந்த தேவாலயம், ஜார்ஜ் டவுனுக்கு அருகிலுள்ள ஆர்மீனியன் தெருவில் அமைந்துள்ளது.
திரெவர் அலெக்சாந்தர் என்பவர் 2014 வரை இந்த தேவாலயத்தின் பராமரிப்பாளராக இருந்தார்; [1] 2019 நிலவரப்படி, திரெவர் அலெக்சாண்ந்தரின் உறவினரான ஜூட் ஜான்சன், பராமரிப்பாளராக உள்ளார்.
Remove ads
தேவாலயம்

இந்த தேவாலயத்தில் சென்னையில் குடியேறிய ஆர்மீனிய வணிகரான கோஜா பெட்ரஸ் ஆஸ்கானை கௌரவிக்கும் ஒரு நினைவுப் பலகை உள்ளது. அதில் அவர் தனது செல்வத்தை குறிப்பிடத்தக்க வகையில் தாராள மனப்பான்மையுடன் பரோபகாரம் செய்பவர் என்று குறிப்பிடபட்டுள்ளது. ஆகா ஷாமியர் ஆஸ்கானுக்குப் பிறகு ஆர்மீனிய வணிகக் குடியேற்றத்தின் தலைவராக ஆனார். மேலும் இந்த தேவாலயம் அவரது தேவாலய வளாகத்தில் கட்டப்பட்டது (மற்றும் 1772 இல் புனிதப்படுத்தப்பட்டது). [2]
- இது ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபையின் [3] நிதியால் இயங்குகிறது. மேலும் கல்கத்தாவில் உள்ள ஆர்மீனிய திருச்சபைக் குழுவால் பராமரிக்கப்படுகிறது.
- தேவாலய வளாகத்தில் சுமார் 350 ஆர்மீனியர்களின் கல்லறைகள் உள்ளன.
- உலகின் முதல் ஆர்மீனிய பத்திரிகையான " அஸ்டாரர் " இதழின் நிறுவனர், வெளியீட்டாளர், ஆசிரியரான ஹருத்யுன் ஷ்மவோன்யன் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான தேவாலயக் கட்டமைப்பை ஒட்டியுள்ள மணிக்கூண்டில் ஆறு பெரிய மணிகள் உள்ளன, அவை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9:30 மணிக்கு பராமரிப்பாளரால் அடிக்கப்படுகின்றன.
- தற்போது ஒரு பாரம்பரிய தளமாக செயல்படும் இந்த தேவாலயம், காலை 9 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
மதராஸ் மாகாணத்தில் ஆர்மீனியர்கள் ஒரு துடிப்பான வணிகக் குழுவினராக இருந்தனர். அவர்கள் ஆர்மீனியாவிலிருந்து மதராசுக்கு வணிகம் செய்ய வந்தனர். ஆங்கிலேயர்கள் பருத்தி துணியை வர்த்தகம் செய்தபோது, ஆர்மீனியர்கள் சிறந்த பட்டு, விலையுயர்ந்த மசாலாப் பொருட்கள், ரத்தினங்கள் போன்றவற்றை விற்றனர்.
ஒரு காலத்தில் மதராசில் சிறிய எண்ணிக்கையிலான ஆனால் வளமையன ஆர்மீனிய மக்கள் வாழ்ந்தனர். இன்று சென்னையில் மூன்று குடும்பங்கள் மட்டும் இங்கு பிரார்த்தனைகளைச் செய்யவும், தங்கள் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் வருகின்றனர். பல்வேறு ஆர்மீனிய பாரம்பரிய தளங்கள், தேவாலயங்கள் உட்பட அவற்றின் கதைகள் ஆர்மீனிய மெய்நிகர் அருங்காட்சியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன [2]
Remove ads
மணிகள்
இங்கு உள்ள மணிக்கூண்டு கோபுரத்தில் உள்ள ஆறு மணிகளும் வெவ்வேறு அளவுகளில், 21 அங்குலம் முதல் 26 அங்குலம் வரை வேறுபடுகின்றன. மேலும் இவை ஒவ்வொன்றும் சுமார் 150 கிலோ வரை எடை கொண்டவை. இவை சென்னையின் மிகப்பெரிய, கனமான மணிகள் என்று நம்பப்படுகின்றன.[4] கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி மணிகள் வெவ்வேறு காலங்களில் நிருமாணிக்கபட்டன:
- ஆர்மீனிய எழுத்துருவுடன் கூடிய ஒரு மணி 1754 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இது 1808 ஆம் ஆண்டு மீண்டும் வார்க்கப்பட்டது, மேலும் இதில் தமிழ் எழுத்துருவும் உள்ளது.
- ஒரு மணியில் உள்ள எழுத்துக்கள் அது 1778 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்பதைக் குறிக்கிறது.
- இரண்டு மணிகளில் உள்ள எழுத்துகள், அவை 19 வயது எலியாசர் ஷாமியரின் நினைவாக தேவாலயத்திற்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன, அவர் தேவாலயத்தின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். ஷாமியர் மதராஸ் நகரத்தின் (இப்போது சென்னை) ஒரு முன்னணி ஆர்மீனிய வணிகரின் இளைய மகன், அவருடைய தனியார் வழிபாட்டு அறை அதன் தரைத் தளத்தில் உள்ளது.
- மீதமுள்ள இரண்டு மணிகள் 1837 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை, அவை அப்போது மியர்ஸ் & ஸ்டெயின்பேங்க் என்று அழைக்கப்பட்ட வைட்சேப்பல் பெல் ஃபவுண்டரியால் வார்க்கப்பட்டன, அதில் "தாமஸ் மியர்ஸ், நிறுவனர், லண்டன்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.
Remove ads
காட்சியகம்
- ஆர்மீனியத் தேவாலயத்தின் மணிகள்
- ஆர்மீனியத் தேவாலயத்தின் மணிக்கூண்டு
- ஆர்மேனிய புனித மேரி தேவாலயம், சுமார் 1905
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
