ஆலம்கிர் பள்ளிவாசல்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பள்ளிவாசல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலம்கிர் பள்ளிவாசல் (Alamgir Mosque) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் உள்ளது. [1] இதை ஔரங்கசீப் பள்ளிவாசல் என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.
Remove ads
அமைவிடம்
ஆலம்கிர் பள்ளிவாசல் ஐந்துநதிகள் சங்கமிக்கும் ஒரு முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. கங்கைக்கு கீழே செல்லும் பரந்த படிகளைக் கொண்டது இந்த படித்துறையாகும். [2]
ஔரங்கசீப் 1669 ஆம் ஆண்டில் வாரணாசியைக் கைப்பற்றி, பிந்து மாதவ் கோயிலை அழித்து ஓர் அற்புதமான பள்ளிவாசலைக் கட்டினார் [3] [4] [5] மேலும் இதற்கு ஆலம்கிர் பள்ளிவாசல் என்று பெயரிட்டார். முகலாய பேரரசின் பேரரசராக ஆன பிறகு அதை ஏற்றுக்கொண்ட இவரது சொந்த கௌரவப் பட்டம் "ஆலம்கிர்". என்பதாகும்.. [4]
பள்ளிவாசலின் தூபிகளால் காலத்தின் சோதனையைத் தாங்க முடியவில்லை, 19 ஆம் நூற்றாண்டில், ஆங்கில அறிஞர் இயேம்சு பிரின்செப் அவற்றை மீட்டெடுக்க வேண்டியிருந்தது. 1948 ஆம் ஆண்டில், வெள்ளப்பெருக்கின் போது ஒரு தூபி இடிந்து விழுந்து ஒரு சிலரைக் கொன்றது. பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கம் மற்ற தூபிகளை அகற்றியது. [6] [7]
Remove ads
அம்சங்கள்
ஆலம்கிர் பள்ளிவாசல் கட்டிடக்கலை ரீதியாக இசுலாமிய மற்றும் இந்து கட்டிடக்கலையின் கலவையாகும். [6] பள்ளிவாசலில் உயரமான குவிமாடங்களும் தூபிகளும் உள்ளன. [8] [7] அதன் இரண்டு தூபிகள் சேதமடைந்தன; ஒரு தூபி இடிந்து விழுந்து சிலரைக் கொன்றது, மற்றொன்று உறுதியற்ற தன்மை காரணமாக அதிகாரப்பூர்வமாக வீழ்த்தப்பட்டது. [7] பள்ளிவாசல் அமைந்துள்ள பஞ்சகங்கா படித்துறை ஐந்து ஓடைகள் சேரும் இடமாகும். அக்டோபரில் முன்னோர்களுக்கு வழிகாட்டும் அடையாளமாக இங்கு மூங்கில் கம்பியின் மேல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. [8]

Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads