ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அல்லது ஏ. வி. பாலம் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாநகரின் வட கரையில் உள்ள கோரிப்ப்பாளையம் பகுதியையும், தென் கரையில் உள்ள யானைக்கல் பகுதியையும் இணைக்கும் வகையில், பிரித்தானிய இந்திய ஆட்சியின் போது வைகை ஆற்றின் மீது மேம்பாலம் கட்டப்பட்டு, 9 டிசம்பர் 1889 அன்று திறக்கப்பட்ட மதுரை நகரத்தின் முதல் மேம்பாலம் ஆகும்.[1]
Remove ads
விவரங்கள்
இம்மேம்பாலத்தின் அகலம் 12 மீட்டர், நீளம் 250 மீட்டர் ஆகும். 16 வளைவு வடிவ தூண்களுடன் கூடியது இம்மேம்பாலம். இதனை கட்டிய பிரித்தானிய கட்டிடப் பொறியிலாளரான ஆல்பர்ட் விக்டர் என்பவர் பெயரால் இப்பாலத்தின் பெயர் உள்ளது. இம்மேம்பாலம் தற்போது 130 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் செயற்பாட்டில் நல்ல நிலையில் உள்ளது.[2][3][4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
