ஆழிக்கோடு கலங்கரை விளக்கம்
கேரளாவில் உள்ள கலங்கரை விளக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆழிக்கோடு கலங்கரை விளக்கம் (Azhikode lighthouse) என்பது இந்திய நாட்டின் கேரளாவில் கொடுங்ஙல்லூர் நகருக்கு மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 இல் இக்கலங்கரை விளக்கம் தொடங்கப்பட்டபோது இப்பகுதியில் வேறு கலங்கரை விளக்கம் எதுவும் கிடையாது. இக்கற்காரை கோபுரம் 30 மீட்டர் உயரம் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப விவரங்கள்
1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று இங்கு மின்னொளி வழிகாட்டி நிறுவப்பட்டது. வெண்சுடர் குமிழ் விளக்குகள் அகற்றப்பட்டு உலோக ஆலைடு விளக்குகள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று பொருத்தப்பட்டன. நேரடி இயக்கி அமைப்பும் இணைக்கப்பட்டு கலங்கரை விளக்கம் மேம்படுத்தப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads