ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் (ஆங்கிலம்: Australian Antarctic Territory, AAT) என்பது அண்டார்க்டிக்காவில் ஆஸ்திரேலியாவினால் உரிமை கோரப்பட்ட பிரதேசம் ஆகும். இதுவே அக்கண்டத்தில் நாடொன்றினால் உரிமை கோரப்பட்ட மிகப் பெரிய பிரதேசம் ஆகும்.

இது தென் அகலாங்கு 60°க்கு தெற்காகவும், கிழக்கு நெட்டாங்குகள் 44°38' க்கும் 160° க்கும் இடையில் அமைந்துள்ள அனைத்துத் தீவுகளையும் பிரதேசங்களையும் அடக்கியுள்ளது. இப்பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பிரிக்கும் அடேலி நிலம் ஆஸ்திரேலியப் பிரதேசத்துக்குச் சொந்தமானதல்ல. இம்மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 6,119,818 கி.மீ.² ஆகும்[1]. இம்மண்டலத்தில் ஆராய்ச்சி நிலையங்களில் இருக்கும் ஆய்வாளர்கள் தவிர வேறு குடிகள் கிடையாது. ஆஸ்திரேலிய சூழல், நீர் வள திணைக்களத்தின் ஒரு பகுதியான ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரிவு மூலம் இது நிர்வகிக்கப்படுகிறது. மோசன், டேவிஸ், கேசி ஆகிய மூன்று நிரந்தர ஆய்வு மையங்கள் இங்குள்ளன.
Remove ads
உபபிரிவுகள்
இப்பிரதேசம் மேற்கிலிருந்து கிழக்கு வரை ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

Remove ads
வரலாறு
1841, ஜனவரி 9 இல் விக்டோரியா நிலம் முதன் முதலில் பிரித்தானியாவால் உரிமை கோரப்பட்டாது. பின்னர் 1930 இல் எண்டர்பை நிலத்தை பிரித்தானியா கோரியது. 1933 இல் 60° தெற்கே மற்றும் 160 கி - 45 கி பிரதேசம் பிரித்தானீய அரச ஆணையின் படி ஆஸ்திரேலியாவுக்குக் கொடுக்கப்பட்டது. 1947 இல் ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் பிரதேசத்தை பிரித்தானியா ஆஸ்திரேலியாவுக்கு வழங்கியது. 1954 பெப்ரவரி 13[2] இல் மோசன் நிலையம் என்ற முதலாவது ஆஸ்திரேலிய ஆய்வு நிலையம் அண்டார்க்டிக்காவில் அமைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் இந்த நிலங்களுக்கான உரிமை கோரலை ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன[3].
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads