இசை நாற்காலி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசை நாற்காலி அல்லது சங்கீதக் கதிரை (musical chairs) என்பது குழந்தைகளாலும் அனைவராலும் விளையாடப்படும், இரசிக்கப்படும் விளையாட்டாகும். இதை அனைவரும் மகிழ்வாக கூடி ஆடி விளையாடுவர். இது பிறந்த நாள் விழா போன்ற சமயங்களில் முற்றிலும் கேளிக்கைக்காக விளையாடப்படும். இவ்விளையாட்டில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்களோ அந்த எண்ணிக்கையில் ஒன்று குறைவாக நாற்காலிகள் வட்ட வடிவில் அமைக்கப்படும். பின்னணியில் இசை ஒலிக்க விளையாடுவோர் நாற்காலிகளை வட்டமடிக்க வேண்டும். இசை நின்ற உடனே விரைவாக நாற்காலியில் அமர வேண்டும். நாற்காலி கிடைக்காத ஒருவர் ஆட்டத்தை விட்டு வெளியேறுவார். ஒரு நாற்காலி எடுக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடரும். கடைசியாக ஒரு நாற்காலிக்காக இருவர் விளையாடுவர். அவர்களுள் ஒருவர் வெற்றி பெறுவர்.[1][2]
Remove ads
விளையாடத்தேவையான பொருட்கள்
விளையாடும் முறை
கதிரைகளை வெளிப்பக்கம் பார்க்குமாறு அடுக்குவார். பின் இசை இசைக்கப்படும்.அனைவரும் கதிரைகளை சுற்றி ஓடுவர். இசை எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போது அனைவரும் கதிரையில் அமர வேண்டும். அமர கதிரையில்லாதவர் வெளியேற்றப்படுவார். ஒவ்வொரு முறை வெளியேற்றப்படும் போதும் ஒரு கதிரையை குறைக்க வேண்டும். இறுதியில் நிற்பவர் வெற்றியாளர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads