இடையாறு
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடையாறு அல்லது திரு இடையாறு, திருஇடையாறு, திருவிடையாறு, தி. எடையார் (T. Edayar) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்னும் பெயரும் உண்டு. ஏனாதிப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசரால் அளிக்கப்பட்ட ஊராக இது இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
அமைவிடம்
இந்த ஊரானது திருவெண்ணெய் நல்லூர் (சாலை) தொடருந்து நிலையத்திற்கு வடமேற்கே ஒரு கி.மீ. தொலைவில் திருவெண்ணெய் நல்லூர் ஊருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் மலட்டாற்றின் தென்கரையில் இருக்கிறது. இவ்வூருக்குத் தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில் கெடிலம் ஆறு ஓடுகிறது. இங்கே மலட்டாற்றின் குறக்கே சிறு அணை ஒன்று உளளது.
இடையாறில் சுந்தரரின் பாடல் பெற்ற மருந்தீசர் கோயில் உள்ளது. இறைவன் பெயர்: இடையற்றீசன்; அம்மன் பெயர்; சிற்றிடைநாயகி. இங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டில், கோயிலின் பெயர் மருதந்துறை எனச் சொல்லப்பட்டுள்ளது.[1]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads