இட்டாநகர் தலைநகர வலாயம்
அருணாச்சலப் பிரதேசத்தில் முன்மொழியப்பட்ட மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்டாநகர் தலைநகர வலாயம் (Itanagar Capital Complex), இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் தெற்கில் அமைந்த பபும் பரே மாவட்டத்தில் உள்ள இட்டாநகர், நஹர்லாகுன் மற்றும் பந்தேர்தேவா ஆகிய பகுதிகளைக் கொண்டு மாவட்டத்திற்கான தகுதியுடன் இட்டாநகர் தலைநகரம் வலாயம் நிறுவப்பட்டது.[1]
நிர்வாகம்
பொது சேவையின் நலன் கருதி துணை ஆணையராக (தலைநகரம்) நியமிக்கப்பட்டார். இதன் துணை ஆணயருக்கு பிற மாவட்ட துணை ஆணையருக்குள்ள அதிகாரம் முழுவதும் உண்டு. இருப்பினும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் மற்றும் அமர்வு நீதிமன்றங்களை பொறுத்தவரை அதிகார வரம்புகள் பபும் பரே மாவட்டத்துடன் உள்ளது. தலைநகர் வளர்ச்சி முகமை இட்டாநகர் தலைநகர வலாயத்தின் துணை ஆணையரின் கீழ் வருகிறது.
இத்தலைநகர வலாயம் 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,22,930 மக்கள் தொகையும், 3 வருவாய் வட்டங்களும், 105 கிராமங்களும், 6 காவல் நிலையங்களுடன் கூடியது.
Remove ads
சுற்றுலா
இட்டாநகர் நகரம் அழகிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் ஆண்டுதோறும் நீண்ட பருவமழையைக் காண்கிறது. நவம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்வது சிறந்தது. போலோ பூங்கா மற்றும் விலங்குக் காட்சி சாலை சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் இடங்கள் ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் அஸ்ஸாமில் உள்ள லிலாபரி மற்றும் அருகிலுள்ள ரயில் நிலையம் ஹர்முட்டி இங்கிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தி, அசாமி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் மொழிகள் நகரத்தில் முக்கியமாக பேசப்படுகிறது. நஹர்லகுன் பகுதியில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளது.
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads