இட்டெர்பியம்(II) குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்டெர்பியம்(II) குளோரைடு (Ytterbium(II) chororide) என்பது YbCl2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். முதலாவதாக கிளெம், சிகூத் ஆகியோர் 1929 ஆம் ஆண்டில் இதை தயாரித்தனர். இட்டெர்பியம்(III) குளோரைடை (YbCl3) ஐதரசன் உபயோகித்து ஒடுக்கவினை வழியாக இட்டெர்பியம் II) குளோரைடை அவர்கள் தயாரித்தார்கள்.
- 2 YbCl3 + H2 → 2 YbCl2 + 2 HCl
மற்ற இட்டெர்பியம்(II) சேர்மங்கள் மற்றும் குறைந்த இணைதிறன் கொண்டிருக்கும் அருமண் சேர்மங்கள் போலவே இட்டெர்பியம்(II) குளோரைடும் வலுவான ஆக்சிசன் ஒடுக்கியாக செயல்படுகிறது. நீர்மக் கரைசலில் இது நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது. தண்ணீரில் உள்ள ஆக்சிசனை நீக்கி ஐதரசன் வாயுவாக மாற்றமைடைகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads