இட்டெர்பியம்(III) ஆக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்டெர்பியம்(III) ஆக்சைடு (Ytterbium(III) oxide) என்பது Yb2O3. என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். பொதுவாகக் காணப்படும் இட்டெர்பியத்தின் சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். இட்டெர்பியம் மூவாக்சைடு, அருமண் சி-வகை உலோக ஆக்சிசன் கூட்டு அமைப்பைக் கொண்டு அமைந்துள்ளது. இவ்வமைப்பு நான்கில் ஒரு பங்கு எதிர்மின் அயனிகள் நீக்கப்பட்ட புளோரைடின் அமைப்பை ஒத்திருக்கிறது. இதனால், இட்டெர்பியம் அணுக்கள் இரண்டு வெவ்வேறான ஆறு ஆயவமைப்புச் (எண்முக மூலக்கூறு அல்லாதது) சூழல்களைக் கொண்டுள்ளன.[1]
Remove ads
பயன்கள்
- கண்ணாடிகள் மற்றும் பளபளப்பான மிளிரிகளுக்கு நிறமூட்டியாகப் பயன்படுகிறது.
- சீரொளிகளில் உள்ள கார்னெட் படிகங்களில் பகுதிப் பொருளாக உள்ளது.
- ஒளியிழைகளில் பயனாகிறது.
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads