இதயவியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இதயவியல் (cardiology) என்பது மருத்துவத்தின் ஒரு பிரிவாகும். இதய பிறவிக்கோளாறு, முடியுருநாடி நோய்கள், இதயச்செயலிழப்பு, இதய அடைப்பிதழ் நோய்கள், இதய மின்உடலியங்கியல் போன்ற இதயம் தொடர்பான கல்வியறிவும் பயிற்சியும் இப்பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றது. இப்பிரிவில் சிறப்புப் பயிற்சிபெற்ற மருத்துவர் இதயவியலாளர் (cardiologist) என அழைக்கப்படுகின்றார்.[1][2][3]

விரைவான உண்மைகள் தொழில், பெயர்கள் ...

இதயவியலாளர் அல்லது இதய நோய் நிபுணர் இதயம் தொடர்பான நோய்களுக்கு அறுவை இன்றிய சிகிச்சை அளிப்பவர் ஆவார். மார்பெலும்பை வெட்டி இதயத்தில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்வோர் இதய அறுவைச்சிகிச்சை நிபுணர் எனப்படுவர். இதய நோய் ஒரு கொடுமை யான் நோய் (testing)

Remove ads

இதய நோய்கள்

இதயவியலில் இயல்பான இதயத்தின் நிலைப்பாடும் இயல்புநிலையில் இருந்து வேறுபடும் சந்தர்ப்பங்களும் கருதப்படுகின்றன.

முடியுரு நாடியில் ஏற்படும் கோளாறுகள்

இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு மூலம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தமனிகள் மூலம் குருதி விநியோகம் செய்யப்படுகின்றது, இந்நிலையில் இதயத்துக்கும் குருதியை வழங்க ஒரு தமனி உள்ளது, அது முடியுருநாடி எனப்படும், இதயத்தின் தசைகளுக்கு ஊட்டச்சத்துக்களையும் ஒட்சிசனையும் வழங்குவதன் மூலம் இதயத்தின் தொழிற்பாட்டைப் பேணிக்காக்கின்றது. இந்த முடியுருநாடியில் அடைப்புகள் ஏற்படும் போது நோய்கள் உண்டாகின்றன. கடிய முடியுருக் கூட்டறிகுறிக்குள் (Acute coronary syndrome) திடீரெனத் தோன்றும் சிலவகை மாரடைப்பு நோய்கள் அடங்கும், இவை மின்னிதய வரைபின் மூலம் வேறுபடுத்தி அறியப்படுகின்றன. கூழ்மைத் தடிப்பு (Atherosclerosis) தமனிகளின் உட்புறப்படையில் படியும் கொழுப்பால் ஏற்படும் நோய். இதனால் தமனிகளின் உட்புறம் தடிப்பு அடைகின்றது. சில சந்தர்ப்பங்களில் இப்பகுதிகள் வெடித்து குருதி உறைதல் ஏற்படுவதால் மேலும் தீயதாகின்றது. இச்செயல்கள் முடியுரு நாடியில் நடைபெறும் போது மார்பக நெறிப்பு (Angina pectoris ) தொடக்கம் மாரடைப்பு வரையிலான கோளாறுகள் உண்டாகின்றன.

இதயத் துடிப்பு ஒழுங்கீனம்

இதயம் ஒழுங்கீனமாகத் துடிப்பதில் இருந்து முற்றிலும் நின்று விடுவது வரை உள்ள சந்தர்ப்பங்கள் வெவ்வேறு காரணிகளால் உண்டாகின்றன. உதாரணமாக மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இதயத் தசை இறப்பினால் அது துடிக்கும் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. இச்சந்தர்ப்பங்கள் இலயமின்மை (arrhythmia) என்று அழைக்கப்படும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads