இந்திய கவுன்சில்கள் சட்டம், 1892
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் கவுன்சில்கள் சட்டம், 1892 (Indian Councils Act 1892) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1892 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம். பிரித்தானிய இந்தியாவின் சட்டமன்றங்களின் (கவுன்சில்கள்) உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க இச்சட்டம் இயற்றப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரசின் தொடர் கோரிக்கைகளை ஏற்று இயற்றப்பட்ட இச்சட்டம் மாகாண சட்டமன்ரங்கள் மற்றும் நடுவண் சட்டமன்றத்தின் அரசு சாரா உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தியது. மேலும் பல்கலைக்கழகங்கள், மாவட்ட வாரியங்கள், சமீன்தார்கள், நகராட்சிகள், வர்த்தக அமைப்புகள் போன்றவை சட்டமன்றங்களுக்கு உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் உரிமை பெற்றன. ஆண்டு நிதி அறிக்கையை சட்டமன்றங்கள் விவாதிக்க இந்திய கவுன்சில் சட்டம், 1861 சட்டம் விதித்திருந்த தடையை இச்சட்டம் நீக்கியது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads