இந்திய தேசிய நூலகம்

From Wikipedia, the free encyclopedia

இந்திய தேசிய நூலகம்map
Remove ads

இந்திய தேசிய நூலகம் (National Library of India) இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும். இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்நூலகம் கொல்கத்தாவில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது 22 இலட்சம் நூல்கள் இங்குள்ளன.[3] இந்தியாவின் நான்கு சேகரிப்பு நூலகங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவைப் பற்றிய, இந்திய மொழிகளில் வெளியான அனைத்து நூல்களும் இங்குச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. [4]

விரைவான உண்மைகள் இந்தியத் தேசிய நூலகம், நாடு ...

அனைத்து இந்திய மொழிகளில் மட்டுமன்றி, உலக மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் இங்குள்ளன. இந்திய மொழிகளில் வங்காள மொழி, இந்தி, தமிழ் ஆகியன அதிக சேகரிப்புகளைக் கொண்டுள்ளன. உருசியம், அரபி, பிரெஞ்சு ஆகியன அதிக நூல்களைக் கொண்டுள்ள பிற நாட்டு மொழிகளாகும். இந்தியாவில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களும் இங்குச் சேகரிக்கப்படுகின்றன. தமிழின் அரிய சுவடிகளும் நூல்களும் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இந்திய அரசு ஆவணங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களும் சேமிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான பல நூல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads