இந்திய தேசியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பல்வேறு அரசியல் சமூகங்களை இணைத்து 1947 ஆண்டு அமைக்கப்பட்ட சுதந்திர கூட்டரசே இந்தியா. சட்டபூர்வமாக இந்தியா ஒரு பல்லின, பன்மொழி, சமயசார்பற்ற தேசம். அது ஒருமித்த அரசியல் வரலாற்று பண்பாட்டு இழைகளால் இணைக்கப்பட்டது. இந்திய தேசியம் இந்தியாவின் நலன்களையும் ஒருமைப்பாட்டையும் பேணி முன்னெடுக்க உதவும் கருத்துருவாக்கம் ஆகும்.


இந்திய தேசியத்தின் கருத்து நிலைகள்
இந்துத்துவ தேசியவாதம்
இந்திய தேசியத்தின் தீவர வடிவங்களில் ஒன்று இந்துதத்துவம் ஆகும். இது இந்தியாவின் மொழி இந்தி மொழி, இந்தியாவின் சமயம் இந்து சமயம் என்று நிலை நாட்ட முனைகிறது. இந்திய பண்பாட்டை பேணும் செயற்பாட்டில் இது இந்திய மரபின் சாதி அமைப்பை அப்படியே பேண தலைப்படுகிறது. [சான்று தேவை]
ராணுவக் கொள்கை
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு தமது அமைதிக் கொள்கையின் விளைவாக, இந்திய விடுதலைக்குப் பின்னர் ராணுவ பலத்தை மேம்படுத்தவும், ராணுவ தளபதிகளின் அறிவுரைக்கு செவிசாய்க்கவும் தவறினார்.
- 1947 இல் நடந்த முதல் காஷ்மீர் சம்பந்தமான இந்திய பாகிஸ்தான் போரில், இந்திய ராணுவத்திற்கு வெற்றி மிக அண்மையில் இருந்த சமயம் பிரதமர் நேரு போர் நிறுத்த உத்தரவிட்டார். ஜெனரல் கரியப்பா அவரிடம் காரணம் கேட்ட போது, யு.என் (United Nations) இன் தலையீட்டால் அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது என்றும், இந்திய ராணுவத்திற்கு 10 அல்லது 15 நாட்கள் தந்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு தந்திருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும் என்றும் ஒப்புக் கொண்டார்.
- 1951 இல் திபெத்தை சீனா கைப்பற்றும் சூழ்நிலையில் இருந்த போது, திபெத்தின் தலாய் லாமா உதவி கேட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அண்டை நாடாக இருந்த போதும், சீனா-திபெத் போரில் இந்தியா திபெத்திற்கு உதவி செய்யத் தவறியது.[1]
- 1951 ஜெனரல் கரியப்பாவும், 1959 இல் ஜெனரல் திம்மையாவும் சீனாவிடமிருந்து போர் அபாயம் இந்திய தேசியத்திற்கு இருப்பதை எச்சரித்தும், அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ணன் மேனனின் தவறான அறிவுரைக்கு செவிசாய்த்து, ’தேசத்தின் எதிரிகள் யார் என்று தீர்மானிப்பது ராணுவம் அல்ல’ என்று கூறி எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கத் தவறினார் ஜவகர்லால் நேரு. விளைவாக,1962 இல் சீனா இந்தியா மீது போர் தொடுத்தது. போரில் இந்தியாவும் தோற்கடிக்கப்பட்டது.
- தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய இந்தப் போரில் இந்தியாவின் 23,200 சதுர கி.மீ பரப்பளவையும் சீனா கைப்பற்றிய பின் தானாகவே போர் நிறுத்தம் செய்தது.[2]
- 1986 ஆம் ஆண்டில், இந்திய தேசியத்தின் பாதுகாப்பைக் கருதாமல், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கம் போபர்ஸ் பீரங்கி ஊழலில் ஈடுபட்டது. அப்போதைய ஜெனரலின் கருத்தும் புறக்கணிக்கப்பட்டது.
- இந்திய தேசிய வரலாற்றில், பிரதமர், ஜெனரலின் கருத்துக்கு செவி சாய்த்தது, இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் 1971 பங்களாதேஷ் பிரச்சனையின் போது நடந்தது.[3]
Remove ads
இந்திய தேசியம் நோக்கி விமர்சனங்கள்
“ | "இந்தியாவை பலம் மிகுந்த ஒரு இராணுவ வல்லரசாக மாற்ற வேண்டும்" என்பதே "ஏழ்மை அதிகமான நாட்டிலும்" இந்திய அரசியல்வாதிகள் சுதந்திரம் அடைந்ததில் இருந்து முன்னெடுத்த முக்கியமான செயல்திட்டம். இந்தியாவை ஒரு இராணுவ சக்தியாக மாற்றுவதன் மூலம் ஒரு போலியான தேசியவாதத்தை இந்திய மக்களிடம் ஊட்டவதும், இந்தியா பலம் வாய்ந்த ஒரு நாடு என்பதாக தன் மக்களிடமும் பிற நாடுகளிடமும் வெளிப்படுத்துவதும் இந்த செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் "இந்தியனாக நீ பெருமை கொள்ள வேண்டும்" என்று கூறுவதும், இந்திய துணைக்கண்டத்தின் பல் வேறு தேசிய இனங்களின் தனித்தன்மையை "இந்தியன்" என்ற தட்டையான ஒரு வடிவத்தில் அடக்க முனைவதும் இந்திய தேசியவாதிகளின் தந்திரம். | ” |
- சசி
இந்தியா ஒளிரவில்லை
“ | எல்லா நாடுகளையும் போல, எங்கள் வாழ்க்கையும் வளமாகப் போகிறது என்றெண்ணித்தான் விடுதலைப் பயணம் தொடங்கியது, இந்திய விடுதலைக்குப் பின்னால் தொடர்ந்து சுரண்டப்பட்ட எங்கள் உழைப்பு, இப்போது அம்பானி வீட்டுக் கழிவறைகளாய் மாறி நறுமணம் வீசுகிறது. அரசுகள் கொடுக்கும் இலவசங்களில் தொடங்கிய இந்தியர்களின் வீழ்ச்சி இப்போது விவசாயிகளின் தற்கொலையில் நின்று கைகொட்டிச் சிரிக்கிறது. | ” |
- கை. அறிவழகன்
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads