இந்தியாவில் முத்தலாக்

சட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

முத்தலாக் (Triple Talaq) என்பது இந்திய, இஸ்லாமிய ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கான வழிமுறை ஆகும்.[1] மூன்று முறை தலாக் எனும் சொல்லை மனைவியிடம் தெரிவித்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். இது சர்ச்சைக்குரிய விசயமாகவும், பேசு பொருளாகவும் இந்தியாவில் உள்ளது. இதன் மூலம் பாலினச் சமத்துவம் பாதிக்கப்படுகிறது எனவும், நீதி மறுக்கப்படுகிறது எனவும், மனித உரிமை மீறல் எனவும் கருத்துகள் உள்ளன. இந்திய நடுவண் அரசும், உச்ச நீதி மன்றமும் இது தொடர்பாக கருத்துகளைக் கொண்டுள்ளன. இதன் காரணமாகவே பொது உரிமையியல் சட்டம் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.[2]

Remove ads

வழிமுறை

முத்தலாக் என்பது இந்திய இஸ்லாமிய சமூகத்தில் பொதுவாகக் கடைபிடிக்கப்படும் விவாகரத்திற்கான வழிமுறையாகும். இதன்படி ஓர் இஸ்லாமிய ஆண் தனது மனைவியிடம் தலாக் (விவாகரத்து என்பதற்கான அரபிச் சொல்) எனும் அரேபிய வார்த்தையை மூன்று முறை தெரிவிப்பதின் மூலம் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றவராகிவிடுவார். இவ்வழிமுறை 1400 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்திய உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது.[3] தலாக் என்பதை உச்சரிப்பின் மூலமோ, எழுத்தின் மூலமாகவோ சமீப காலங்களில் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது சமூக வலைத்தளம் மூலமாகவோ தெரிவிப்பதன் மூலம் விவாகரத்து செய்யப்படுகிறது. இதில் இஸ்லாமிய ஆண் தனது மனைவியை விவாகரத்துச் செய்வதற்கான காரணத்தைத் தெரிவிப்பது அவசியமல்ல. இவ்வாறு தெரிவிக்கும் போது ஒவ்வொரு தலாக் சொல்வதற்க்கு இடையே மனைவியின் மாதவிடாய் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் ஒரே சமயத்திலேயே மூன்று முறை தலாக் எனச் சொல்லி விவாகரத்து செய்யும் வழக்கமே வழக்கத்தில் உள்ளது. மூன்று முறை தலாக் சொல்லி முடித்த பின்னர், அவ்விவாகரத்தை திரும்பப் பெறவோ அல்லது செல்லாததாக்கவோ முடியாது. இவ்விவாகரத்திற்கு பின்னரும் மனைவி தன்னை விவாகரத்து செய்த கணவருடன் இணைந்து வாழ விரும்பினால், பெண் நிக்காஹ் ஹலாலா என்ற முறைப்படி வேறு ஒருவரை மணந்து உடலுறவு கொண்ட பின்னர் அவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்ற பின்னரே முதலாமவருடன் இணைந்து வாழ இயலும்.[4]

Remove ads

எதிர்ப்பு

முத்தலாக் முறைக்கு எதிராக இஸ்லாமியப் பெண்கள் இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.[5] மேலும் முத்தலாக் முறை இந்திய அரசியல் சாசனப் பிரிவு 14 -ற்கு முரணாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முத்தலாக் மற்றும் நிக்காஹ் ஹலாலா கொடுமைகளுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றம் தமக்குச் சாதகமான தீர்ப்பை அளிக்க வேண்டும் என இஸ்லாமியப் பெண்கள் வாரணாசி ஹனுமன் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்.[6]

தீர்ப்பு

இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், முத்தலாக் முறை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என ஆகத்து 2017இல் தீர்ப்பு வழங்கியது.[7][8]

முத்தலாக் ஒழிப்பு சட்டம்

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், 2019 முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதாவை பெரும்பான்மையான வாக்குகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[9][10] இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்து சட்டமாக இயற்றப்பட்டது.[11]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads