இமானுவேல் கோட்டை

கொச்சியில் உள்ள ஒரு சிதைந்த கோட்டை From Wikipedia, the free encyclopedia

இமானுவேல் கோட்டைmap
Remove ads

இமானுவேல் கோட்டை (Fort Emmanuel இது Fort Manuel என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொச்சியின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கோட்டை ஆகும்.[1] இது போர்ச்சுகலின் மன்னர் முதலாம் மானுவல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஆசியாவின் முதல் போர்த்துகீசிய கோட்டை ஆகும்.[2]

விரைவான உண்மைகள் இமானுவேல் கோட்டை (Fort Manuel) Fortaleza do Cochim (Emanuel), அமைவிடம் ...

இந்த இடத்தின் தற்போதைய பெயரானது கோட்டைக் கொச்சி என்பதாகும். இந்த பெயர் இந்தக் கோட்டையினால் வந்தது. மட்டச்சேரிக்கு அருகில் உள்ள இந்தப் பகுதியானது பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என்றும் அழைக்கப்படுகிறது.

Remove ads

வரலாறு `

செப்டம்பர் 1503 இல், கொச்சி அரசரால் அரபிக் கடலின் நீர்முனைக்கு அருகில் இம்மானுவேல் கோட்டையைக் கட்ட அபோன்சோ டி அல்புகெர்க்கிக்கு அனுமதியளித்தார். செப்டம்பர் 26 ஆம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கின. "இது சதுர வடிவத்தைக் கொண்டதாகவும் மூலைகளில் உள்ள கொத்தளங்களில் போர்த் தளவாடங்கள் கொண்ட கோட்டையாக இருந்தது". இதன் மதிலானது தென்னை மரக் கம்பங்களை இரட்டை வரிசையில் ஆழமாக நடப்பட்டு இணைக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது; மேலும் இது நீர்நிறைந்த அகழியால் பாதுகாக்கப்பட்டது. இந்த கோட்டைக்கு 1503 அக்டோபர் 1 ஆம் நாள் காலையில் "இம்மானுவேல்" என்று பெயரிடப்பட்டது.[2]

கொச்சி நிலப்பரப்பின் தென்மேற்கு நோக்கி நீர் செல்லும் பகுதியில் இந்த கோட்டை கட்டப்பட்டது. 1538 இல் கோட்டை வலுப்படுத்தப்பட்டது.[1] இந்தக் கோட்டைக்கு பின்புறமாக போர்த்துகீசியர்கள் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம் உட்பட தங்கள் குடியிருப்பைக் கட்டினர். 1663 ஆம் ஆண்டு வரை கொச்சி கோட்டை போர்த்துகீசிய வசம் இருந்தது. பின்னர் டச்சுக்காரர்கள் இப்பகுதியைக் கைப்பற்றி போர்த்துகீசிய நிறுவனங்களை அழித்தனர். டச்சுக்காரர்களை தோற்கடித்து ஆங்கிலேயர்கள் கோட்டையைக் கைப்பற்றுவரை அதாவது 1795 வரை டச்சுக்காரர்கள் கோட்டையை தங்கள் வசம் வைத்திருந்தனர். 1806 வாக்கில் டச்சுக்காரர்களும் பின்னர் ஆங்கிலேயர்களும் கோட்டை மதிலையும் கோட்டையையும் அழித்தனர்.

பழைய கொச்சியிலும், கோட்டை கொச்சி கடற்கரை பக்கத்திலும், ஓரளவு மீட்டெடுக்கப்பட்ட பீரங்கித்தொகுதி மற்றும் மதில் மற்றும் கோட்டைகளின் பிற எச்சங்கள் உள்ளன. இவை இப்போது சுற்றுலா தலங்களாக உள்ளன.

Remove ads

படக்காட்சியகம்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads