இயக்கவியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இயக்கவியல் (Dynamics) விசையியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.
இடப்பெயர்ச்சி இயக்கம், சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் ஆகிய இயக்கங்களைப் பொருள்கள் பெற்றுள்ளன.
இயக்கவியல், திடப் பொருள் இயக்கவியல் மற்றும் வளைமைப் பொருள் இயக்கவியல் என இருவகைப்படும். திடப் பொருள் எனப்படுவது உருத்திரிபு அற்றவை, அவற்றின் மீது விசை செயல்படும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் நிலையாக இருக்கும்.
Remove ads
வரலாறு
இயக்கவியலின் அடிப்படை விதிகளை நீயூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிபியா மெதெமேட்டிகா (Principia Mathematica) என்னும் படைப்பு நூலை 1687இல் வெளியிட்டார். மேலும் ஆய்லர், மேக்சுவெல் போன்றோர் முறையே சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் குறித்து விதிகளை வகுத்தனர்.
விசை
விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.[1]
நியூட்டனின் இயக்க விதிகள்
பொருளின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை நியூட்டன் உருவாக்கினார். பொருள் மற்றும் அவைகளின் மீது ஒரு விசை ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படும்.
முதல் விதி விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவு மற்றும் திசையை பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசையின் தன்மையையும் விளக்குகின்றன.[2][3]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads