இயற்கை (திரைப்படம்)
ஜனநாதன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இயற்கை (ⓘ), 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படம் தேசிய அளவிலான தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது. இப்படத்தை குணசேகரன் என்பவர் தயாரித்தார். எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா, சீமா பிசுவாசு ஆகியோர் நடித்திருந்தனர். பாரிய செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்திருந்தார். தஸ்தாயெவ்ஸ்கி என்ற உருசிய எழுத்தாளரின் கதையான வெண்ணிற இரவுகள் என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. மேலும் 30மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2][3]
Remove ads
திரைக்கதை
மூவருக்கு இடையிலான காதல் இப்படத்தின் மையக் கரு. இராமேசுவரம் துறைமுகத்திற்கருகில் வசிக்கும் பெண்ணிற்கும், அவளை விரும்பும் இருவரையும் கொண்டு கதை நகர்கிறது. மருது(ஷாம்) ஒர் அனாதையும் மாலுமியும் ஆவார். இவரின் கப்பல் இராமேசுவரத்திற்கு வருகிறது. கடற்பயணத்தை முடித்துக் கொண்டு அங்கேயே தங்கி விடலாமெனக் கருதுகிறார். கப்பலில் உள்ளவர்களுக்கு பழம், பொருட்களை விற்பனை செய்யும் நான்சி (இராதிகா) யின் மீது விருப்பம் கொள்கிறார். ஆனால், நான்சி, ஏற்கனவே அங்கு வந்திருந்த கப்பல் தலைவரை(அருண் விஜய்) நினைத்தே வாழ்கிறார். கப்பல் தலைவரும் அவளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையில் மருதுவை ஏற்க முடியாமல் தவிக்கிறார் நான்சி. மருதுவை ஏற்பதா கப்பல் தலைவருக்குக் காத்திருப்பதாக என்ற குழப்பத்தில் இருந்த நான்சி, வெகு நாட்கள் காத்திருந்தும் தலைவர் வராததால் மருதுவை ஏற்கிறார். அப்போது நிகழும் கிறித்துமசு விழாவில் தலைவர் திரும்ப தலைவரைத் திருமணம் செய்து கொள்கிறார்.
Remove ads
பாடல்கள்
இசை : வித்யாசாகர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads