இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை ஏரி
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சென்னையில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை ஏரி (ICF Lake ) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். சென்னையின் வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் இந்த ஏரி அமைந்துள்ளது. மழைக்காலத்தில் மழைநீர் பொழிவால் ஏரி அதன் உச்சநிலையை அடைகிறது.
Remove ads
வரலாறு
1930 ஆம் ஆண்டுகளில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டதிலிருந்து இந்த ஏரி இப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. [2] 1950 ஆம் ஆண்டு வரை இந்நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் ஒரு வடிகட்டுதல் அலகு மூலம் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வழங்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டுகளில் ஏரி எண்ணெய் கழிவுகள் கலப்பதால் மாசுபடத் தொடங்கியது. பின்னர் வில்லிவாக்கம் பகுதியில் இருந்து சாக்கடை நீரும் கலந்து இணைந்ததால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. [2] 2017 ஆம் ஆண்டில், இரயில்பெட்டி தொழிற்சாலை நிறுவனம் ₹ 10 மில்லியன் [3] செலவில் ஏரியை ஆய்வு செய்து புனரமைத்தது.[4] ஏரியில் இருந்த கசடுகளை அகற்றி ஏரியில் புதிய வகை மீன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏரியைச் சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டது.
Remove ads
ஏரி
450 மீட்டர் நீளம், 270 மீட்டர் அகலம் மற்றும் 7 மீட்டர் ஆழம் கொண்டதாக ஏரியின் பரப்பளவு உள்ளது.[5] ஏரியின் படுகையில் ஏழு ஆழ்துளை கிணறுகள் மூழ்கியுள்ளன. [1] ஏரியைச் சுற்றியுள்ள பாதையின் அளவு 3 கிலோமீட்டர்கள். [6]
எதிர்காலம்
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை எதிர்காலத்தில் 15,000 சதுர அடியில் பசுமை இல்லத்தை 7.5 மில்லியன் செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது மூலிகை, மலர், அலங்கார மற்றும் உட்புற தாவரங்களை உள்ளடக்கிய நான்கு அறைகளைக் கொண்டிருக்கும். [3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads