இராதா மதன் மோகன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராதா மதன் மோகன் கோயில் (Radha Madan Mohan Temple,), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தின் தலைமையிடமான மதுரா நகரத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இராதை மற்றும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.[1][2] இது பிருந்தாவனத்தின் பழமையான, மிகவும் மதிக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.[3]இக்கோயில் மூலவர் மதன் மோகன் எனும் கிருஷ்ணர், இராதை மற்றும் கோபியர்களுடன் காட்சி அளிக்கிறார்.[4][5]
யமுனை ஆற்றின் கரையில் அமைந்த இராதா மதன் மோகன் கோயில், நாகரா கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது. காளியன் படித்துறையில் அமைந்த இக்கோயிலின் உயரம் 50 அடி ஆகும்.[6]
Remove ads
வரலாறு
தொன்மக் கதைகளின் படி இக்கோயிலை கிருட்டிணனின் கொள்ளும்பேரன் வஜ்ரநாபனாக் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் கோயில் அழிந்துவிட்டது. பின்னர், அத்வைத ஆச்சாரியர் பிருந்தாவனத்திற்குச் சென்றபோது, ஒரு பழைய ஆலமரத்தின் அடிவாரத்தில் மதன் மோகனின் தெய்த்தைக் கண்டுபிடித்தார். மதன மோகனின் வழிபாட்டை அவர் தனது சீடரான புருசோத்தம சௌபேயிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் சனாதன கோஸ்வாமியிடம் தெய்வத்தை வழங்கினார்.[7]
வரலாற்று ஆதாரங்களின் படி 1580-ஆம் ஆண்டில் இல் முல்தான் வணிகர் கபூர் ராம் தாஸ் என்பவரால் சிறீ சனாதன கோஸ்வாமியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த கோயில் மீண்டும் கட்டப்பட்டது.[8] கி.பி. 1670 இல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் படையெடுப்பால் இந்தக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், மூலவர் சிலை ஜெய்சிங்கால் ஒரே இரவில் ஜெய்ப்பூருக்கு இரகசியமாக கொண்டு செல்லப்பட்டது.[9] பின்னர், மன்னர் கோபால் சிங்கால் மூலவர் சிலைகள் கரௌலிக்கு எடுத்துச் செல்லபட்டன.[6] இராதா மதன் மோகன் கோயிலின் பழைய மூலவர் தற்போது இராசத்தானின் கரௌலியில் உள்ள மதன் மோகன் கோவிலில் நிறுவப்பட்டுள்ளது.
மதன் மோகனின் மூலவர் சிலை இடுப்பிலிருந்து கீழே கிருஷ்ணரைப் போலவே இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மைலவர் சிலையை திருப்பிக் கேட்டபோது மறுக்கபட்டது. இதனால் கி.பி 1748 இல் மதன் மோகன் கோவிலில் புதியதாக உருவாக்கபட்ட மூலவர் சிலை நிறுவப்பட்டது. கருவறையில் மதன் மோகன், இராதை, இலலிதா எனப்படும் கோபி ஆகிய மூவர் உள்ளனர். சிவப்புக் கல்லில் 20 மீட்டர் உயரத்தில் இக்கோயில் கட்டபட்டுள்ளது.
Remove ads
படக்காட்சிகள்
- 1795-இல் இராதா மதன் மோகன் கோயில்
- இராதா மதன் மோகன் கோயிலின் வெளிப்புறக் காட்சி, பிருந்தாவனம்
- இராதா மதன் மோகன் கோயிலின் உட்புறக்காட்சியின் ஓவியம், ஆண்டு 1814-15.
- கோயிலின் முன்புறக் காட்சி
- கோயிலில் பக்தர்கள்
- இராதா மதன் மோகன் கோயில் ஓவியம், ஆண்டு 1789
அருகமைந்த இடங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads