இராமேசுவரி நேரு

From Wikipedia, the free encyclopedia

இராமேசுவரி நேரு
Remove ads

இராமேசுவரி நேரு, இயற்பெயர் இராமேசுவரி இரைனா, (1886-1966) இந்தியாவைச் சார்ந்த ஒரு சமூக செயற்பாட்டாளராவார். ஏழை மக்கள் மற்றும் பெண்களின் உயர்வுக்காக உழைத்தார். 1902இல் மோத்தி லால் நேருவின் மருமகன் மற்றும் சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரி சவகர்லால் நேருவின் உறவினரான பிரிச்சிலால் நேருவை மணம்புரிந்தார். அவரது மகன், பரசு குமார் நேரு, இந்திய அரசுப் பணியாளராக இருந்து, பல மாநிலங்களில் கவர்னராக இருந்தார்.

Thumb
இராமேசுவரி நேரு

சிறீ தர்பன் என்ற பெண்களுக்கான இந்தி மாத இதழின் ஆசிரியராக 1909 முதல் 1924 வரை இருந்தார். இவர், அகில இந்திய பெண்கள் மாநாட்டின் நிறுவனர்களுள் ஒருவர்[1]. மேலும் 1942இல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] கோப்பன்கேகனில் நடைபெற்ற உலக பெண்கள் அகல் பேரை மற்றும் 1961ல் கேரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க-ஆசிய பெண்கள் மாநாட்டிற்கு பிரதிநிதிகளை வழிநடத்திச் சென்றார்.[சான்று தேவை]

1955இல் இவரது சமூக சேவைக்காக இந்திய அரசாங்கம் இவருக்கு பத்தும விபூசன் விருதினை வழங்கியது. [3] 1961இல் லெனின் அமைதி பரிசினைப் பெற்றார்..[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads