இருதயநோய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இருதயநோய் என்பது, இருதயத்தின் பலவித நோய்களைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்லாகும். அந்நோய்களுள், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோயே (Coronary Artery Disease - சிஏடி CAD) மிகவும் பொதுவானதாகும். இருதயத்தில் உள்ள இரத்த நாடிகள் அடைபடுவதாலோ சுருங்குவதாலோ சிஏடி (CAD) ஏற்படுகின்றது. அத்தறுவாயில் இருதய தசைகளுக்கு ஆக்சிசன், செறிவான இரத்த ஓட்டம் கிடைப்பது தடைபடுகிறது. இதன் விளைவாக, மார்பு வலி அல்லது மாரடைப்பு ஏற்படக் கூடும்.[1]
Remove ads
ஆபத்துக் காரணிகள்
வயது
வயது அதிகரிக்க அதிகரிக்க இருதயநோய் ஏற்படக் கூடிய ஆபத்தும் அதிகரிக்கிறது.
பாலினம்
- ஆண் - 55 வயதுக்கும் மேல்
- பெண் - மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு
குடிவழி
நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் - பெற்றோர்கள், உடன் பிறந்தோர் அல்லது குழந்தைகள் - 55 வயதுக்கு முன்னரோ, பெண் உறவினர்களைப் பொறுத்தவரை மாதவிடாய் சுழற்சி நிற்பதற்கு முன்னரோ இருதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் இருதயநோய் ஏற்படுவதற்கான ஆபத்து கூடுகிறது.
இனம்
தொல்குடிகள், ஆப்பிரிக்க, ஆசிய குடிவழியினருக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் உண்டாகக் கூடிய வாய்ப்பு கூடுதல் என்பதால், அவர்களுக்கு மற்ற மக்களை விட இருதய நோய் ஏற்படும் தீவாய்ப்பு அதிகம்.
தவிர்த்து மாற்றியமைக்கக் கூடிய ஆபத்துக் காரணிகள்
- உயர் இரத்த அழுத்தம்
- அதிக இரத்தக் கொழுப்பு
- புகைப்பிடித்தல்
- நீரிழிவு
- உடற்பருமன்
- உடற்பயிற்சி இன்மை
- அதிக அளவில் மது அருந்துதல்
- மன அழுத்தம்
Remove ads
References
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads