இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன் (Prince Andrew, Duke of York, பிறப்பு: ஆண்ட்ரூ ஆல்பர்ட் கிறிஸ்டியன் எட்வர்ட்; பெப்ரவரி 19, 1960), ஐக்கிய இராச்சியத்தின் முடியரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமகன் பிலிப்பின் இரண்டாம் மகனும் மூன்றாவது குழந்தையுமாவார். பிறக்கும்போது ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய மண்டலம் எனப்படும் ஏழு சுதந்திர நாடுகளுக்கு தலைமையேற்க தகுதிபெற்ற அரசமரபினர்களில் இரண்டாவதாக இருந்தார். தற்போது மூத்த சகோதரருக்கு இரண்டு மக்கள் பிறந்துள்ளநிலையில் மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைந்தபிறகு 16 நாடுகளின் அரசராக தகுதியுடைய நான்காவது நபராக உள்ளார்.
வேந்திய கடற்படையில் உலங்கு வானூர்தி ஓட்டுநராகவும் பின்னர் பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ள ஆண்ட்ரூ தற்போது கமாண்டராக பணிநிலை வகிக்கிறார்; ரியர் அட்மிரல் என்ற கௌரவ பணிநிலை வழங்கப்பட்டுள்ளது. 1986இல் இளவரசர் ஆண்ட்ரூ சாரா பெர்குசனை திருமணம் புரிந்தார்; இவர்களது திருமணம், பின்னர் பிரிந்து வாழ்தல் மற்றும் 1996இல் மணமுறிவு ஆகியன பிரித்தானிய ஊடகங்களில் மிகவும் இடம்பிடித்திருந்தன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads