ஈர்ப்பியல் மாறிலி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈர்ப்பியல் மாறிலி (gravitational constant அல்லது universal gravitational constant) என்பது இரு பொருட்களுக்கிடையிலான ஈர்ப்பு விசையைக் கணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய இயற்பியல் மாறிலியாகும். இம்மாறிலி நியூட்டனின் மாறிலி (Newton's constant) எனவும் அழைக்கப்படுகிறது. இதனை G எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பர். (g - புவிஈர்ப்பு முடுக்கத்தைக் குறிக்கிறது.). ஈர்ப்பியல் மாறிலியின் அளவு கிட்டத்தட்ட 6.67430(15)×10−11 m3⋅kg−1⋅s−2[1] ஆகும்.

Remove ads
விதிகளில் பயன்பாடு
இரு பொருட்களுக்கிடையில் காணப்படும் ஈர்ப்பு விசையை அளப்பதற்கான சமன்பாட்டில் ஈர்ப்பியல் மாறிலி பயன்படுத்தப்படுகின்றது. இச்சமன்பாட்டில் m1, m2 என்பன இரு பொருட்களின் திணிவுகளைக் குறிக்கின்றன. r என்பது இரு பொருட்களுக்கிடையிலான தூரத்தையும், G என்பது ஈர்ப்பு மாறிலியையும் குறிக்கின்றது.
இம்மாறிலியை மிகத் துல்லியமாக இன்னமும் அளக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 1.2×10−4 எதிர்பார்க்கப்படும் வழுவோடு அளக்கப்பட்ட அளவீடு வருமாறு.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads