எச். வி. ஆர். அய்யங்கார்

இந்திய வங்கியாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எச். வி. ஆர். அய்யங்கார் ( Haravu Venkatanarasimha Varadaraja Iyengar) என்பவர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறாவது ஆளுநராக மார்ச்சு 1957 முதல் 1962 பிப்ரிவரி வரை  பதவி வகித்தவர். [1]

பணிகள்

இந்திய சிவில் சேவைப் பணியில் சேர்ந்த எச் வி ஆர் அய்யங்கார் மாநில வைப்பகத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ரிசர்வ் வங்கியில் ஆளுநராக இருந்த காலகட்டத்தில் இந்திய அரசு அணா, பைசா என்ற நாணய முறையிலிருந்து புதிய தசம முறைக்கு மாற்றியது.   இவருக்கு இந்திய அரசு பத்ம விபூசண் விருது வழங்கிக் கவுரவித்தது 

எழுத்துப்பணி

தம் பணி ஓய்வுக்குப் பிறகு பொருளியல் மற்றும் வங்கிப் பொருளியல் தொடர்பான கட்டுரைகள் எழுதிவந்தார். 2002 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டை ஒட்டி அக்கட்டுரைகளை மகள் இந்திராவும் மருமகன் பிபின் படேலும் தொகுத்து, ஒரு நூலாகப் பதிப்பித்து வெளியிட்டார்கள்.

சான்றாவணம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads