எச்செலான் பாசறை
கொழும்பு கோட்டையில் உள்ள இராணுவ பாசறை From Wikipedia, the free encyclopedia
Remove ads
எச்செலோன் பாசறை (Echelon Barracks) என்பது இலங்கையின் கொழும்பில் கொழும்பு கோட்டையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்த ஒரு இராணுவப் பாசறை ஆகும். விடுதலைக்குப் பிறகு இது புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் வசம் வந்தது.
Remove ads
வரலாறு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய இலங்கையின் இராணுவப் படையின் தலைமையகமாக இது கட்டப்பட்டது. இந்த முகாம் இரண்டு-அடுக்கு பாசறைத் தொகுதிகளால் ஆனது. இது பரந்த வராந்தாக்கள், பல கால்பந்து, ஆக்கி ஆடுகளங்களுடன் போதுமான பெரிய அணிவகுப்பு மைதானத்தைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. இதன் அணிவகுப்பு மைதானம் எச்செலோன் சதுக்கம் என்ற பெயரைப் பெற்றது. அது அப்போதைய பழைய நாடாளுமன்றத்தை (இப்போதய ஜனாதிபதி செயலகம்) ஒட்டியுள்ளது. இது 1963 வரை இலங்கை பீரங்கிப் படையணியின் தலைமையகமாக இருந்தது. 1970 களின் முற்பகுதியில், வணிக வளர்ச்சிக்குத் தோதாக படைமுகாம் இடிக்கப்பட்டது.[1]
1997 முதல் கொழும்பு உலக வர்த்தக மையம் எச்சலான் சதுக்கத்தில் உள்ளது.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads