என். சந்தோசு எக்டே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நித்தே சந்தோசு எக்டே (Nitte Santosh Hegde, பிறப்பு சூன் 16, 1940) ஓர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் இந்திய துணைத் தலைமை அரசு வழக்கறிஞரும் தற்போது கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவாக பணியாற்றுபவருமாவார்.

இளமையும் கல்வியும்
முன்னாள் மக்களவைத் தலைவர் நீதியரசர் கே. எசு. எக்டேக்கும் மீனாட்சி எக்டே (அத்யந்தயா)க்கும் மகனாகப் பிறந்தார்.[1] சூன் 16,1940ஆம் ஆண்டில் கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்தில் நித்தே சிற்றூரில் பிறந்தார். மங்களூரில் புனித அலோசியசு கல்லூரியிலும் சென்னையின் சென்னை கிருத்துவக் கல்லூரியிலும் பயின்றார். பெங்களூருவில் உள்ள புனித யோசஃப் கல்லூரியிலும் பெங்களூரு மத்திய கல்லூரியிலும் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1965ஆம் ஆண்டு சட்டப் படிப்பை பெங்களூரின் அரசு சட்டக் கல்லூரியில் (தற்போது பல்கலைக்கழக சட்டக் கல்லூரி) முடித்தார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads