எப்சோமைட்டு

From Wikipedia, the free encyclopedia

எப்சோமைட்டு
Remove ads

எப்சோமைட்டு (Epsomite) என்பது MgSO4•7H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு நீரிய மக்னீசியம் சல்பேட்டுக் கனிமம் ஆகும். பளிங்கு போன்ற ஊசியான செஞ்சாய்சதுர படிகமாக எப்சோமைட்டு கிடைக்கின்றது. பெரும்பாலும் திண்ணிய அல்லது நார்போன்ற படிகமாகவும் உள்ளது. எப்சோமைட்டின் ஒளிவீச்சு, பளிங்கு மிளிர்விலிருந்து பட்டு மிளிர்வு வரை வேறுபடுகிறது. இதன் கடினத் தன்மை 2 - 2.5 எனவும் அடர்த்தி 1.67 ஆகவும் உள்ளது. எப்சோமைட்டை எப்சம் உப்பு என்றும் அழைப்பதுண்டு. தண்ணீரில் எளிதாகக் கரையும் இக்கனிமம் உலர் காற்றில் ஒரு மூலக்கூறு தண்ணீரை இழந்து அறுநீரேற்றாக மாறுகிறது. இதனால் ஒற்றைச் சாய்வு கட்டமைப்பைப் பெறுகிறது.

விரைவான உண்மைகள் எப்சோமைட்டு Epsomite, பொதுவானாவை ...
Remove ads

தோற்றமும் கண்டுபிடிப்பும்

கசப்புடன் உப்புக்கரிக்கும் சுவையும் கொண்ட இக்கனிமம் சுண்ணாம்புக் குகையிலும், நிலக்கரி சுரங்கப் பாதைகளிலும் காணப்படுகிறது. பெரும்பாலும் கிப்சத்துடன் சேர்ந்து .கடல் அல்லது உவர் ஏரிப்படிவுகளில் அமைந்துள்ள மெல்லிய உப்பு அடுக்குகளில் எப்சோமைட்டு கிடைக்கிறது. தென்கிழக்கு இங்கிலாந்தின் சர்ரே மாகாணத்திலுள்ள எப்சம் நகரில் 1806 ஆம் ஆண்டு எப்சோமைட்டு முதன்முதலில் விவரிக்கப்பட்டது. இதனாலேயே இதற்கு எப்சோமைட்டு என்ற பெயரும் சூட்டப்பட்டது. மெலாண்டிரைட்டு, கிப்சம், ஆலோடிரைகைட்டு, பிக்கெரிங்கைட்டு, அலுனோகென், ரோசனைட்டு, மிராபிலைட்டு போன்ற கனிமங்களுடன் இணைந்து எப்சோமைட்டு இயற்கையில் கிடைக்கிறது[3].

Remove ads

தொடர்புடைய கனிமங்கள்

மோரினோசைட்டு (NiSO4•7H2O), கோசுலாரைட்டு (ZnSO4•7H2O [2] போன்ற கனிமங்களின் திண்மக் கரைசல்களும் எப்சோமைட்டு குழுவுடன் தொடர்பு கொண்டுள்ள பிற கனிமங்களாகும். கையீசெரைட்டு (MgSO4•H2O) ஒரு குறைந்த நீரேற்று மக்னீசியம் சல்பேட்டு ஆகும்.

Thumb
எப்சோமைட்டின் படிகக் கட்டமைப்பு


மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads