எமிரேட்சு விளையாட்டரங்கம்

From Wikipedia, the free encyclopedia

எமிரேட்சு விளையாட்டரங்கம்map
Remove ads

ஆஷ்பர்டன் குரூவ் (Ashburton Grove), விளம்பர ஆதரவின் காரணமாக எமிரேட்சு விளையாட்டரங்கம் (Emirates Stadium) என்று அறியப்படுவது, வடக்கு இலண்டனில் உள்ள கால்பந்து மைதானமாகும். இது பிரீமியர் லீக் அணியான ஆர்சனல் கால்பந்துக் கழகத்தின் விளையாட்டரங்கம் ஆகும். 60,000-க்கும் சற்றே அதிகமான கொள்ளளவு உடைய இம்மைதானம் 2006 ஆண்டு திறக்கப்பட்டு, ஆர்சனல் கால்பந்துக் கழகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் வெம்பிளி மற்றும் ஓல்டு டிராஃபோர்டு மைதானங்களுங்குப் பிறகு இதுவே அதிக கொள்ளளவு கொண்டதாகும். 2004-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இம்மைதானத்துக்கான நிதி கிடைப்பது சிரமமாகவிருந்தது. அக்டோபர் 2004-இல் எமிரேட்சு ஏர்லைன்சு நிதியாதரவு தருவதாக செய்தி வெளியிடப்பட்டது. £390 செலவில் 2006-ஆம் ஆண்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டது. ஆர்சனல் அணியின் போட்டிகள் தவிர்த்து, பிரேசில் தேசிய கால்பந்து அணியின் ஐரோப்பிய போட்டிகள் அனைத்தும் இங்குதான் விளையாடப்பட்டு வருகின்றன.

விரைவான உண்மைகள் ஆஷ்பர்டன் குரூவ், இடம் ...
Remove ads

வெளியிணைப்புகள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads