எம். ஜி. ஆர் நகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். ஜி. ஆர் நகர்(M.G.R. Nagar) என்பது எம்.ஜி. ராமச்சந்திரன் நகரின் என்பதன் சுருக்கமாகும். எம்.ஜி.ஆர் நகரானது இந்தியாவின் சென்னையில் உள்ள ஒரு சுற்றுப் பகுதியாகும்.[2] இங்கு காய்கறி சந்தையும் மீன் சந்தையும் உள்ளது.[3]
Remove ads
அமைவிடம்
எம்ஜிஆர் நகரானது சென்னை கே. கே. நகரில் அண்ணா பிரதான சாலையின் தெற்கே அமைந்துள்ளது. இந்நகரானது வடக்கில் கே.கே.நகர், மேற்கில் நெசப்பாக்கம், தெற்கில் அடையாறு மற்றும் தென்கிழக்கில் ஜாஃபர்கான் பேட்டை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
போக்குவரத்து
கே. கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து மாநகரப் பேருந்துகளும் எம்ஜிஆர் நகரின் மூன்று பேருந்து நிறுத்தங்களான எம்ஜிஆர் நகர் சந்தை, டேட்டா உடிபி நிறுத்தம் மற்றும் அஜந்தா நிறுத்தம் ஆகியவற்றில் நின்று செல்லும். மேலும் அண்ணா பிரதான சாலையின் வழியாகவும் செல்கின்றன.[4] அசோக் நகரில் உள்ள உதயம் தியேட்டர் சந்திப்பில் இருந்து இந்தப் பகுதிக்கு பகிர்வூர்திகள் இயங்குகின்றன.
பொதுச் சேவைகள்
எம்ஜிஆர் நகரின் காவல் நிலையமானது (R10) வெங்கட்ராமன் சாலையில் அமைந்துள்ளது.[5]
நிகழ்வுகள்
2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 4000 பேர் கூடிய அந்த நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர்.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads