எல். ஐ. சி. கட்டடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எல்.ஐ.சி. கட்டடம், சென்னையின் அடையாளங்களில் ஒன்று. இது லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தின் முக்கிய கிளை ஆகும். இது இந்த நிறுவனத்தின் தென்னிந்தியத் தலைமையகம் ஆகும்.[4] இது அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டடம் 177 அடி உயரத்தைக் கொண்டது.[5]
Remove ads
கட்டிட அமைப்பு
இந்தக் கட்டடம் பதினைந்து தளங்களைக் கொண்டது. இது 1,26,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது 1959-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட போது, ஒன்பது மில்லியன் செலவு ஆனது.[5]
பண்பாட்டில்
இதுவும் சென்னை சென்ட்ரலும், அண்ணா மேம்பாலமும், சென்னையின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. பல தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கின்றன.[6]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

