எல்கின் சலவைக்கற்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எல்கின் சலவைக்கற்கள் (Elgin Marbles) என்பன, அதென்சின் அக்குரோபோலிசில் உள்ள பார்த்தினனிலும் பிற கட்டிடங்களிலும் இருந்து கழற்றி எடுக்கப்பட்ட ஒரு தொகுதி செந்நெறிக்காலக் கிரேக்கச் சிற்பங்கள், கல்வெட்டுக்கள், கட்டிடக் கூறுகள் போன்றவற்றைக் குறிக்கும்.[1][2] எல்கினின் ஏழாவது ஏர்ல், தாமசு புரூசு, 1799க்கும் 1803க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓட்டோமான் பேரரசில் பிரித்தானியாவுக்கான தூதராக இருந்தார். இவர் பார்த்தினனில் இருந்து கூறுகளைக் கழற்றி எடுப்பதற்கான சர்ச்சைக்கு உரிய அனுமதி ஒன்றை ஓட்டோமான் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
1801 ஆம் ஆண்டுக்கும் 1812 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எல்கினின் முகவர்கள், பார்த்தினனில் அக்காலத்தில் எஞ்சியிருந்தவற்றில் அரைப்பங்களவு சிற்பங்களைக் கழற்றி எடுத்தனர். அத்துடன் புரொப்பிலாயா, இரெக்தியம் ஆகிய கட்டிடங்களிலிருந்தும் கட்டிடக் கூறுகளை அகற்றினர்.[3] இவை பின்னர் கடல் வழியாகப் பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டன. பிரித்தானியாவில் இப்பொருட்களை பெற்றுக்கொண்டதற்குச் சிலர் ஆதரவு தெரிவித்தனர்.[4] வேறு சிலர், என்கினின் நடவடிக்கை கலையழிப்புக்கு[5] அல்லது கொள்ளைக்கு[6][7][8][9][10]ஒப்பானது எனக் கண்டனம் தெரிவித்தனர்.
பிரித்தானிய நாடாளுமன்றில் நிகழ்ந்த பொது விவாதம் ஒன்றைத் தொடர்ந்து எல்கின் குற்றம் அற்றவர் எனத் தீர்மானிக்கபட்டதுடன், 1816 ஆம் ஆண்டில் இப் பொருட்களை பிரித்தானிய அரசாங்கம் எல்கினிடம் இருந்து விலைக்கு வாங்கிப் பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு வழங்கியது. இப்பொருட்கள் இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இதற்கொனக் கட்டப்பட்ட டுவீன் காட்சியகத்தில் உள்ளன. இவை அங்கேயே இருக்கலாமா அல்லது அதென்சுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமா என்பது தொடர்பில் இன்னும் விவாதம் நடந்துகொண்டுதான் உள்ளது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads